பதிவு செய்த நாள்
05 ஜூன்2014
23:46

புதுடில்லி: கடந்த 2013 – 14ம் நிதியாண்டில், நாட்டின் பால் உற்பத்தி, 6 சதவீதம் அதிகரித்து, 14 கோடி டன்னாக உயர்ந்திருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.இதற்கு முந்தைய நிதியாண்டில், பால் உற்பத்தி, 13.24 கோடி டன்னாக இருந்தது என, தேசிய பால் மேம்பாட்டு வாரியம் (என்.டீ.டீ.பீ.,) தெரிவித்து உள்ளது.
பால் உற்பத்தியில், உத்தரபிரதேசம் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. இதையடுத்து, ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்கள் உள்ளன.அதிகபட்ச தனிநபர் பால் நுகர்வில், பஞ்சாப் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, அரியானா உள்ளது.நாட்டின் மொத்த பால் உற்பத்தியில், 70 சதவீதம் அப்படியே பயன்படுத்தப்படுகிறது. எஞ்சியுள்ள, 30 சதவீதம் மட்டும், பால் பொருட்களாக மாற்றப்படுகின்றன.
பால் பொருட்கள் தயாரிப்பில், தயிர், நெய்க்கு அடுத்தபடியாக, பால் பவுடர் உள்ளது.வரும் 2021 – 22ம் நிதியாண்டில், இந்தியாவின் பால் தேவை, 18 கோடி டன்னாக உயரும் என, மதிப்பிடப் பட்டு உள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|