பதிவு செய்த நாள்
23 ஜூன்2014
00:47
புதுடில்லி:நடப்பு 201415ம் நிதியாண்டில்,இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி,5.5சதவீதமாக குறையும் என,உலகவங்கி தெரிவித்துள்ளது.இது, முந்தைய மதிப்பீட்டில், 5.7 சதவீதமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
சர்வதேச நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை மற்றும் உள்நாட்டில் பருவமழை குறைவு போன்றவை,நடப்பு நிதியாண்டில், இந்தியபொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.இருப்பினும், வரும் 201516 மற்றும் 201617ம் நிதியாண்டுகளில்,இந்திய பொருளாதாரம் முறையே, 6.3 சதவீதம் மற்றும் 6.6 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி காணும்.
நிதி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் வலுவடைந்தால், இந்த வளர்ச்சி, 89 சதவீதமாக உயர வாய்ப்புள்ளது என, உலக வங்கியின் இயக்குனர் ஒன்னோ ருகுல் தெரிவித்தார்.உலக வங்கியின் முந்தைய மதிப்பீட்டில், சர்வதேச பொருளாதார வளர்ச்சி, 3.2 சதவீதமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. இது, 2.8 சதவீதமாக குறையும் என, மறு மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|