பதிவு செய்த நாள்
28 ஜூன்2014
00:07
புதுடில்லி:நாட்டின் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி, நடப்பு 2014 – 15ம் நிதியாண்டில், 4.20 லட்சம் கோடி ரூபாயை (7,000 கோடி டாலர்) தாண்டும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.இது, கடந்த நிதியாண்டில், மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதியை விட, 15 சதவீதம் அதிகமாகும்.
கடந்த சில மாதங்களாக, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து அதிகளவில் ஆர்டர்கள் வந்து குவிவதால், நாட்டின் பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி சிறப்பான அளவில் அதிகரிக்கும் என, கணக்கிடப்பட்டுள்ளது.இந்தியாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதியில், பொறியியல் பொருட்கள் பிரிவு, 5வது இடத்தில் உள்ளது.
மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலையால், சென்ற 2012 – 13ம் நிதியாண்டில், பொறியியல் பொருட்கள் ஏற்றுமதி, 3 சதவீதம் சரிவடைந்து, 5,700 கோடி டாலராக வீழ்ச்சி கண்டது. பின்பு நிலைமை சீரானதையடுத்து, கடந்த 2013 – 14ம் நிதியாண்டில், இதன் ஏற்றுமதி, 9 சதவீதம் உயர்ந்து, 6,200 கோடி டாலராக வளர்ச்சி கண்டது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|