ஆன் – லைன் வசதிக்கு மாறும் அஞ்­ச­லக ஆயுள் காப்­பீட்டு துறைஆன் – லைன் வசதிக்கு மாறும் அஞ்­ச­லக ஆயுள் காப்­பீட்டு துறை ... தங்கம் விலை சிறிது உயர்வு தங்கம் விலை சிறிது உயர்வு ...
பெட்­ரோலில் 10 சத­வீத எத்­தனால் கலப்­ப­தற்கு கடும் எதிர்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2014
00:32

பெட்­ரோலில், எத்­தனால் கலப்­பதை, 10 சத­வீ­த­மாக உயர்த்­தி­யுள்­ள­தற்கு, இந்­திய ரசா­யன குழு (ஐ.சி.சி.,), கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளது. மத்­திய அரசு, தாம­த­மின்றி, முடிவை திரும்ப பெற வேண்டும் என, இக்­குழு கோரிக்கை விடுத்­துள்­ளது.
பெட்­ரோலில் கட்­டாயம் கலக்க வேண்­டிய எத்­தனால் அளவு, 5 சத­வீ­தத்தில் இருந்து 10 சத­வீ­த­மாக உயர்த்­தப்­பட்­டுள்­ள­தாக, அண்­மையில், மத்­திய உணவு அமைச்சர் ராம்­விலாஸ் பஸ்வான் தெரி­வித்தார். உப பொருள்:மத்­திய அரசு, சர்க்­கரை ஆலைகள், எண்ணெய் நிறு­வ­னங்கள் ஆகிய முத்­த­ரப்­பி­னரும் பயன்­பெறும் நோக்­கோடு, எடுக்­கப்­பட்ட இம்­மு­டி­விற்கு, ரசா­ய­னங்கள் துறை கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ளது.
இது குறித்து, ஐ.சி.சி., ரசா­ய­னங்கள், நிதி, வர்த்­தகம், உணவு மற்றும் பெட்­ரோ­லிய அமைச்­ச­கங்­க­ளுக்கு கடிதம் எழு­தி­யுள்­ளது. அதில் உள்ள விவரம் வரு­மாறு:
கரும்புச் சக்­கையில் இருந்து கிடைக்கும் உப பொருட்­களில், தொழிற்­சா­லை­க­ளுக்­கான எரி­சா­ராயம் முக்­கி­ய­மா­னது. இது, பெயிண்ட், இங்க், வேளாண் ரசா­ய­னங்கள், மருந்­துகள், ஜவுளி மற்றும் 'பெட்' பாட்­டில்கள் போன்­ற­வற்றின் தயா­ரிப்பில் இடம் பெறு­கி­றது. பெட்­ரோலில் எத்­தனால் கலப்­பதை அதி­க­ரித்தால், மேற்­கண்ட ரசா­யன தொழிற்­சா­லை­களின் மூலப்பொரு­ளுக்கு தட்­டுப்­பாடு ஏற்­படும். இறக்­கு­ம­தியை சார்ந்­தி­ருக்க நேரிடும். மத்­திய அரசு, கச்சா எண்ணெய் இறக்­கு­ம­தியை குறைக்கும் நோக்­கோடு, இந்த முடிவை எடுத்­துள்­ளது.
ஆனால், இதன் மூலம், கச்சா எண்ணெய் இறக்­கு­மதி செலவு 100 ரூபாய் குறைந்தால், ரசா­யன மூலப் பொருள் இறக்­கு­மதி செலவு, 200 ரூபாய் உயரும். அதனால், உட­ன­டி­யாக, எத்­தனால் கலப்பு உயர்வை, மத்­திய அரசு திரும்ப பெற வேண்டும்.சர்க்கரை ஆலைகள்:சர்க்­கரை உற்­பத்தி, 2.40 கோடி டன்­னாக உள்ள நிலையில், 5 சத­வீத எத்­த­னாலை சப்ளை செய்ய முடி­யாத சூழலில் சர்க்­கரை ஆலைகள் உள்­ளன. இதை, 10 சத­வீ­த­மாக உயர்த்­தி­யதன் மூலம், எத்­தனால் பற்­றாக்­குறை, 92 கோடி லிட்டர் அள­விற்கு உயரும். இதனால், கச்சா எண்ணெய் இறக்­கு­மதி குறையும்;
எத்­தனால் இறக்­கு­மதி :அதி­க­ரிக்கும். இதன் கார­ண­மாக, ரசா­யன துறையின், மூலப் பொருள் மற்றும் முழு­மை­யான பொருட்­களின் இறக்­கு­மதி செல­வினம் அதி­க­ரிக்கும். இந்த சுமையை, நுகர்வோர் சுமக்க நேரிடும். சர்க்­கரை ஆலைகள், ஒரு லிட்டர் எத்­த­னாலை, எண்ணெய் நிறு­வ­னங்­க­ளுக்கு, 43 ரூபாய்க்கு வழங்­கு­கின்­றன. அதை, 35 ரூபாய் செலவில், இறக்­கு­மதி செய்ய முடியும்.இவ்­வாறு, அந்த அறிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.–பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து–

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)