ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.96 குறைவுஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.96 குறைவு ... மரபணு மாற்ற சோயாவால் இறக்குமதிசெலவு குறையும் மரபணு மாற்ற சோயாவால் இறக்குமதிசெலவு குறையும் ...
ரிலையன்ஸ் ஆர்­ஜி­யோவின் ‘ஸ்பெக்ட்ரம்’ உரி­மத்தை ரத்து செய்க:தலைமை கணக்கு தணிக்கை அலு­வ­லகம் அர­சுக்கு பரிந்­துரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2014
00:50

புது­டில்லி:ரிலையன்ஸ் குழு­மத்தை சேர்ந்த ஆர்­ஜியோ நிறு­வ­னத்தின், குரல் வழி சேவைக்­கான அகண்ட அலை­வ­ரிசை உரி­மத்தை திரும்ப பெற வேண்டும் என, தலைமை கணக்கு தணிக்கை அலு­வ­லகம் (சி.ஏ.ஜி.,), தொலை தொடர்பு துறை­யிடம் தெரி­வித்­துள்­ளது. இது தொடர்­பாக, தொலைத் தொடர்பு துறை அளித்த விளக்­கத்தை, சி.ஏ.ஜி., நிரா­க­ரித்­துஉள்­ளது.
ஆதாயம்:கடந்த, 2012 – 14ம் ஆண்­டு­க­ளுக்கு இடையே நடை­பெற்ற, ‘ஸ்பெக்ட்ரம்’ ஏலங்­களில், தொலை தொடர்பு நிறு­வ­னங்கள் செலுத்­திய தொகையின் அடிப்­ப­டையில் கணக்­கிட்டால், ஆர்­ஜியோ நிறு­வ­னத்­திற்கு, 22,842 கோடி ரூபாய் அள­விற்கு தேவை­யற்ற ஆதாயம் கிடைத்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது என, சி.ஏ.ஜி., தெரி­வித்­துள்­ளது.
இதற்கு, தொலைத் தொடர்பு துறையின் கொள்கை அறி­விப்பு தான் காரணம். 2010ம் ஆண்டில் நடை­பெற்ற, ‘ஸ்பெக்ட்ரம்’ ஏலத்தில், அகண்ட அலை­வ­ரி­சைக்­கான உரி­மத்தில், குரல் வழி சேவை­க­ளையும் வழங்­கு­வ­தற்கு, தொலை தொடர்பு துறை அனு­ம­தித்­தி­ருந்தால், மேலும் பல நிறு­வ­னங்கள் அலை­வ­ரிசை ஏலத்தில் பங்­கேற்­றி­ருக்கும். அவ்­வாறு செய்­யா­ததால், ‘3ஜி ஸ்பெக்ட்ரம்’ உரி­மத்­திற்­கான ஏலம் மூலம், மிக குறைந்த அள­விற்கே அர­சுக்கு வருவாய் கிடைத்­துள்­ளது.இந்­நி­லையில், 2013ம் ஆண்டு, தொலை தொடர்பு துறையின், புதிய ஒன்­று­பட்ட சேவைக்கு மாற, ஸ்பெக்ட்ரம் உரிமம் இல்­லாமல், இணை­ய­தள சேவைக்­கான உரிமம் மட்டும் வைத்­துள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு, நுழைவு கட்­ட­ண­மாக, 15 கோடி ரூபாய் வசூ­லிக்­கப்பட்­டது.
கட்டணம்:அதே சமயம், இணை­ய­தள சேவை­யுடன், அகண்ட அலை­வ­ரிசை உரி­மத்தை வைத்­துள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு, 1,658 கோடி ரூபாய் மட்டும் கட்­டணம் நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.இது, இணை­ய­தள சேவை உரி­மத்தை மட்டும் வைத்­தி­ருந்த, இன்­போடெல் பிராட்பேண்ட் (ஐ.பீ.,) என்ற நிறு­வ­னத்தை கைய­கப்­ப­டுத்­திய, ரிலையன்ஸ் குழு­மத்தின் ஆர்­ஜியோ நிறு­வ­னத்­திற்கு ஆதா­ய­ம­ளிக்கும் வகையில் அமைந்­துள்­ள­தாக, சி.ஏ.ஜி., தெரி­வித்­துள்­ளது.
ஏல நடை­முறை முடிந்த சில மணி நேரத்­திற்கு பிறகே, இந்த கைய­கப்­ப­டுத்தும் அறி­விப்பு வெளி­யா­னது என்­றாலும், இதில் ஏதேனும் விதி­மீறல் உள்­ள­தாக, என அரசு ஆரா­யவோ, எச்­ச­ரிக்கை செய்­ய வோ இல்லை. இதனால், இப்­பி­ரச்னை குறித்து, அரசு, விசா­ரணை மேற்­கொள்ள வேண்டும். விதிகள் மீறப்­பட்­டி­ருந்தால், பிராட்பேண்ட் ஸ்பெக்ட்ரம்' உரி­மத்தை ரத்து செய்ய வேண்டும் என, சி.ஏ.ஜி., அறிக்­கையில் தெரி­வித்­துள்­ளது.இந்த குற்­றச்­சாட்­டு­களை மறுத்­துள்ள தொலைத் தொடர்பு துறை, அரசின் கொள்கை முடி­வு­களில், சி.ஏ.ஜி., தலை­யி­டக்­கூ­டாது என்றும், அர­சுக்கு ஏற்­பட்­டுள்­ள­தாக கூறப்­படும் இழப்பு, ஆதா­ர­மற்ற, அனு­மா­ன­மான மதிப்­பீடு எனவும், சி.ஏ.ஜி.,க்கு பதில் அளித்துள்­ளது.
இன்போடெல் பிராட்பேண்ட்:முகேஷ் அம்பானியின் ரிைலயன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தை சேர்ந்த ஆர்­ஜியோ நிறுவனம், நாடு முழு­வதும் மொபைல் போன், பிராட்பேண்ட் உள்ளிட்ட சேவைகளை துவக்க உள்­ளது. இதற்­காக, இந்நிறுவனம் 13 ஆயிரம் கோடி ரூபாய் முத­லீடு செய்­துள்­ளது. கடந்த, 2010ம் ஆண்டு, ஜூன் 11ம் தேதி, இணை­ய­தள சேவை வழங்கும் இன்­போடெல் பிராட்பேண்ட் நிறு­வ­னத்தை, 4,800 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் கைய­கப்­ப­டுத்­தி­யது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)