பதிவு செய்த நாள்
15 ஜூலை2014
23:48
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த ஸ்டேட் பேங்க் இந்தியா, குறுகிய கால வைப்பு நிதிக்கான, வட்டியை, 0.50 சதவீதம் குறைப்பதாக அறிவித்து உள்ளது.இதன்படி, 7 முதல் 179 நாட்கள் வரையிலான வைப்பு நிதிக்கான, வட்டி விகிதம், 7.5 சதவீதத்திலிருந்து, 7 சதவீதமாக குறைக்கப்படுகிறது.இப்புதிய வட்டி விகிதம், வரும் 18ம் தேதி அமலுக்கு வருகிறது.
மேலும், 760 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட, ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான குறித்தகால டிபாசிட்டிற்கான வட்டி, 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, 6.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அது போன்று, 61 நாட்கள் முதல் ஓராண்டு வரையிலான டிபாசிட்டிற்கு, வட்டி விகிதம், 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, 6.75 சதவீதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இவ்வங்கியை தொடர்ந்து, மேலும் பல வங்கிகள் வைப்புத் தொகைக்கான வட்டியை குறைக்கக் கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|