தங்கம் விலையில் மாற்றமில்லைதங்கம் விலையில் மாற்றமில்லை ... ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.168 குறைவு ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.168 குறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
சீறி வரும் ஜாக்குவார்...!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2014
14:40

ஆடம்பர கார் மற்றும் இசைப் பிரியர்களின் மோகத்திற்கு தாகம் தீர்க்கும் வகையில், தனது அடுத்த இரு குழந்தைகளை ஈன்றெடுத்துள்ளது உலகின் முன்னணி கார் நிறுவனமான ஜாகுவார்.
ஆரம்ப காலம் முதலே ஆடம்பர கார் பிரியர்களின் கவனத்தை ஈர்த்து வரும் ஜாகுவார் கார் நிறுவனம், ஜூலை 11ம் தேதியன்று தனது எக்ஸ்ஜே வகையில் ப்ரீமியம் லக்ஸூரி மற்றும் போர்ட்ஃபோலியோ என இருவகையான டீசல் கார்களை சென்னையில் அறிமுகப்படுத்தியது. பிரிட்டிஷ் ஸ்டைல், உயர்தர சொகு” மற்றும் ஜாகுவாரின் பாரம்பரிய குணாதிசயங்களை கொண்டுள்ள இந்த எக்ஸ்ஜே வகை கார்களுக்கு மூன்று மசாஜ் சீட்டுகளுடன் கூடிய மேம்படுத் தப்பட்ட பின்பக்க இருக்கைகள், தலைக்கும் காரின் மேல் தளத்திற்கும் இடையில் உள்ள உயரத்தை அதிகரித்துள்ள இருக்கையின் அமைவிடம் மற்றும் புதிய ரியர் பிசினஸ் டேபிள் உள்ளிட்ட வசதிகள் மேலும் அழகு சேர்க்கின்றன.
உள்ளே... வெளியே!
சாப்ட் க்ரெய்ன் மற்றும் லெதர் கொண்டு நேர்த்தியான முறையில் தயாரிக்கப்பட்ட வடிவமைப்பு அனைவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் உள்ளது. தொடுதிரை மூலம் இருக்கைகளை கட்டுப்படுத்தும் வசதி; பின் இருக்கையில் இருப்பவருக்கு வசதியாக முன் இருக்கையின் இடத்தை, பட்டன் மூலமாக நகர்த்திக் கொள்ளுதல்; நான்கு வகைகளில் பின் இருக்கைகளை, தேவைக்கேற்றபடி மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளிட்டவைகள் காரில் பயணிப்போருக்கு சொர்க்கத்தை காட்டும் விதமாக அமைந்துள்ளன. வெப்ப பிரதிபலிப்பு; இயற்கை ஒளியில் பயணம் செய்யும் வசதி உள்ளிட்ட எண்ணற்ற அம்சங்களை கொண்டு உருவாக்கப்பட்ட மேற்புற கண்ணாடி, காரின் தோற்றத்திற்கு கூடுதல் அழகு சேர்க்கிறது.
பாதுகாப்பு
சவாலான பார்க்கிங்கின் போது குறிப்பிட்ட மீட்டர் இடைவெளியில் சமிஞ்சை எழுப்புவது மற்றும் தொடுதிரையில் எச்சரிக்கை செய்வது போன்ற வசதிகள் ஓட்டுனர்களுக்கு வரப்பிரசாதமான ஒன்று. முழுவதும் அலுமினியம் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த காரினுள் ஆறு காற்றுப்பைகள் இருப்பது பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
இசையால் அசையும்...
அதிநவீன தொழில்நுட்பங்கள்; "ஜாகுவார் ஸ்மார்ட் கீ சிஸ்டம்' உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய இந்த இரு கார்கள்... இசை ரசிகர்களுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஜாகுவார் ப்ரீமியம் லக்ஸூரியில் 2 சப்-ஊஃபர்களுடன் கூடிய 14 ஸ்பீக்கர்கள்; போர்ட்ஃபோலியோவில் 2 சப்-ஊஃபர்களுடன் கூடிய 20 ஸ்பீக்கர்கள் என இசையில் மயங்கிக் கிடப்போரை புதுமையான உலகத்திற்குள் பயணிக்க வைத்து, அதிர்வுகளில் ஆட வைக்கிறது எக்ஸ்ஜே.
போட்டி
பென்ஸ் எஸ் கிளாஸ், பிஎம்டபிள்யு 7 சீரிஸ் கார்களுக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு இருக்கும் நிலையில் இந்தியாவிலேயே அசம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் ஜாகுவர் எக்ஸ்ஜே சீரிஸ் கார்கள் போட்டியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.
மேம்படுத்தப்பட்ட அம்சங்களுட்ன் உருவாக்கப்பட்டு, காரின் வெளிப்புறத்திற்கு அழகு சேர்க்கும் மேற்புற கண்ணாடி வடிவமைப்பு.
உயர்ரக வடிவமைப்புடனும், அதிகமான இடவசதியுடனும் அழகாக வடிவமைப்பட்டுள்ள காரின் உள்பகுதி.
விலை
ப்ரீமியம் லக்ஸூரி ரூ.93.74 லட்சம்போர்ட் ஃபோலியோ ரூ.100.45 லட்சம்(எக்ஸ்-ஷோரூம் சென்னை)
காரின் தோற்றம்
நீளம் - 5,252 மி.மீ.,
அகலம் - 2,105 மி.மீ.,
உயரம் - 1,457 மி.மீ.,
வீல் பேஸ் - 3,157 மி.மீ.,
மொத்த எடை - 2,450 கிலோ

காரின் வேகம்
0-100 கி.மீ., - 6.4 வினாடிகள்
அதிகபட்ச வேகம் - 250 லிமிடெட்
கியர் பாக்ஸ் - 8 ஸ்பீடு ஆட்டோ
எரிபொருள் கொள்ளளவு - 82 லிட்டர்
இன்ஜின் திறன் - (சிசி) 2993

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)