வாகன உதிரிபாகங்கள் துறை6 சதவீதம் வளர்ச்சி காணும்வாகன உதிரிபாகங்கள் துறை6 சதவீதம் வளர்ச்சி காணும் ... தேவை குறைவால் பருத்தி விலை மேலும் சரியும் தேவை குறைவால் பருத்தி விலை மேலும் சரியும் ...
தயாரிப்பு துறை மந்த நிலையால் வெள்ளி இறக்குமதி வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2014
00:10

சென்ற ஜூன் மாதத்தில், வெள்ளி இறக்குமதி, மதிப்பின் அடிப்படையில், 53.4 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 1,271 கோடி ரூபாயாக (21.28 கோடி டாலர்) சரிவடைந்துள்ளது என, மத்திய வர்த்தக அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுணக்கம்:கடந்தாண்டின் இதே மாதத்தில், இதன் இறக்குமதி, 2,666 கோடி ரூபாயாக (45.70 கோடி டாலர்) அதிகரித்து காணப்பட்டது. மேலும், வெள்ளி இறக்குமதி அளவின் அடிப்படையிலும், 579 டன்னிலிருந்து, 323 டன்னாக வீழ்ச்சி கண்டுள்ளது.கணக்கீட்டு மாதத்தில், சர்வதேச சந்தையில், வெள்ளி விலை, 5.7 சதவீதம் குறைந்து, ஒரு அவுன்சுக்கு சராசரியாக, 21.12 டாலரிலிருந்து, 19.91 டாலராக சரிவடைந்துள்ளது.
ஆபரண துறையில் ஏற்பட்ட சுணக்கம் மற்றும் தயாரிப்பு துறையின் மந்த நிலையால் வெள்ளி இறக்குமதி வீழ்ச்சி கண்டுள்ளது. மொத்த வெள்ளி நுகர்வில், தயாரிப்பு துறையின் பங்களிப்பு, மூன்றில் இரண்டு பங்காக உள்ளது என, ஹூண்டியா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுரேஷ் ஹூண்டியா தெரிவித்தார்.கடந்த 2013ம் ஆண்டில் தான், வெள்ளி இறக்குமதி முன் எப்போதும் இல்லாத வகையில், 5,819 டன்னை எட்டியது.
அனுமதி:இந்நிலையில், நடப்பாண்டின் முதல் ஆறு மாத காலத்தில், நாட்டின் வெள்ளி இறக்குமதி, 2,882 டன்னாக உள்ளது. இது, கடந்தாண்டின் இதே காலத்தில், 2,980 டன்னாக அதிகரித்திருந்தது. இதையடுத்து, நடப்பாண்டில், வெள்ளி இறக்குமதி, 5 ஆயிரம் டன் என்ற அளவிலேயே இருக்கும்.சென்ற ஜூன் மாதத்தில், வெள்ளி இறக்குமதி வீழ்ச்சி கண்டுள்ள அதேசமயம், தங்கம் இறக்குமதி, 310 கோடி டாலராக எகிறியுள்ளது. இதற்கு, ரிசர்வ் வங்கி, சில நிறுவனங்களுக்கு தங்கம் இறக்குமதி செய்ய அனுமதி அளித்ததே காரணம் என, இத்துறையைச் சேர்ந்த வர்த்தகர்கள் தெரிவித்தனர்.– பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)