பதிவு செய்த நாள்
07 ஆக2014
10:47

இந்தியாவில், தற்போது தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில், கன மழை பெய்து வருகிறது. சில மாதங்களில், வடகிழக்கு பருவமழை காலம் துவங்கும். எனவே, மழைக்கால கார் பராமரிப்பு விஷயத்தில், மாருதி சுசூகி நிறுவனம் கவனம் செலுத்த துவங்கி உள்ளது. இந்த நிறுவனம், ‘ஆல்டோ, வேகன் ஆர், ரிட்ஸ், ஸ்விப்ட், டிசையர், எஸ்எக்ஸ்4, ஓம்னி, எக்கோ, ஜிப்சி மற்றும் கிரான்ட் விடாரா’ உள்ளிட்ட மாடல் கார்களை விற்பனை செய்து வருகிறது. சாலையில் செல்லும் போது, திடீரென கார் பழுது ஏற்பட்டாலும், அவசர உதவிக்கு, 1800 102 1800 என்ற எண்ணுக்கு போன் செய்து, உதவியை பெறும் சேவையையும், மாருதி சுசூகி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
தற்போது, மழைக்கால கார் பராமரிப்பு சேவையை துவக்கி உள்ளது. இந்த நிறுவனத்திற்கு, நாடு முழுவதும், 1,449 நகரங்களில், 3,500 ஒர்க் ஷாப்கள் உள்ளன. இங்கு, மழைக்கால கார் பராமரிப்பு மேற்கொள்ளப்படும் என, நிறுவனம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. காரில், எந்த உதிரி பாகங்களை மாற்ற வேண்டும், மழையின் போது, காரில் செல்லும் போது, வாகன பாதுகாப்பு முறையாக உள்ளதா என்ற சோதனையை மேற்கொள்வது, தள்ளுபடி விலையில், புதிய ‘வைப்பர் கிட்’ விற்பனை, உள்ளிட்ட சேவைகள், இந்த ஒர்க் ஷாப்களில் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|