சரிவிலிருந்து மீண்டது ரூபாயின் மதிப்புசரிவிலிருந்து மீண்டது ரூபாயின் மதிப்பு ... தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.192 உயர்வு தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.192 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சில அறிவுரைகள்...!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஆக
2014
10:52

இன்றைய சூழலில், இருசக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. சாலையில், கன ரக வாகன நெரிசல் இருந்தாலும் கூட, இருசக்கர வாகனத்தில், ஓரிடத்தில் இருந்து எளிதாக, மற்றொரு இடத்திற்கு சென்று விட முடியும். அதே நேரத்தில், இருசக்கர வாகன பராமரிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். இதுகுறித்து, தனியார் நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி ஒருவர் கூறும் சில அடிப்படை விதிகள்:
* இருசக்கர வாகனத்தை ஓட்டும் முறையை நன்கு அறிந்து, பின் ஓட்ட வேண்டும்.
* ஒரே பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் போட வேண்டும். நல்ல பெட்ரோல் பங்க் எது என்பதை, சுய அனுபவம் மூலமோ, நண்பர்களின் ஆலோசனையின் பேரிலோ அறிந்து கொள்ளலாம்.
* வாரத்திற்கு ஒருமுறை முன்சக்கரம், பின் சக்கரத்திற்கு காற்று நிரப்புவது அவசியம்.
* 2,500 முதல், 3,000 கிலோ மீட்டருக்கு ஒரு முறை, வாகனத்தை சர்வீஸ் செய்ய வேண்டியது அவசியம். சர்வீசின் போது, பழைய ஆயிலை எடுத்துவிட்டு, புதிய ஆயிலை ஊற்றுவதும் அவசியம்.
* 15 நாட்களுக்கு ஒரு முறை வண்டியை துடைக்க வேண்டும். இதனால், வாகனத்தில் படியும், தூசு மற்றும் கரையை அகற்ற முடியும்.
* வாகனத்தை ஓட்ட துவங்கும் முன், ஆயில், காற்று, ஹாரன் இயக்கம், பெட்ரோல் சரியாக இருக்கிறதா என, சோதிக்க வேண்டும்.
* வாகனத்தை ஓட்டும் போது கிளெச்சைப் பிடித்துக் கொண்டும், பிரேக்கை அழுத்திக் கொண்டும் ஓட்டக் கூடாது. அப்படி ஓட்டினால், வாகனம் மிக விரைவில் பழுதாகிவிடும்.
* வாகனத்தை இயக்குவதற்கு முன், சைடு ஸ்டாண்டை, எடுத்து விட வேண்டும்.
* மொபைலில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்ட கூடாது; பின்னால் வரும் வாகனங்கள் எழுப்பும் ஹாரன் சத்தம் கேட்காது.
* சாலையின் நடுவே வாகனம் ஓட்ட வேண்டாம்.
* வாகனத்தின் சைடு கண்ணாடியைப் பார்க்காமல், இடது, வலது புறம் திரும்பாதீர்கள். * பகலில், வாகனத்தின் முகப்பு விளக்கு எரியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* கண்டிப்பாக, ‘ஹெல்மட்’ அணிந்து வாகனம் ஓட்டுங்கள்.
* மது அருந்தி விட்டு வாகனத்தை ஒட்டாதீர்கள்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)