பதிவு செய்த நாள்
08 ஆக2014
04:14
புதுடில்லி:மதிப்புமிக்க பிரபல இந்திய நிறுவனங்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை, டாடா குழுமம் தக்க வைத்து கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் சொத்து மதிப்பு, 2,100 கோடி டாலராகும் (1.26 லட்சம் கோடி ரூபாய்) என, பிராண்ட் பைனான்ஸ் ஆய்வு நிறுவனம் தெரிவித்து உள்ளது.கடந்த ஓராண்டில், டாடா குழுமத்தின் வர்த்தக மதிப்பு, 300 கோடி டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளது.இதையடுத்து, 410 கோடி டாலர் (24,600 கோடி ரூபாய்) சொத்து மதிப்புடன், எல்.ஐ.சி., நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது.இவற்றை தொடர்ந்து, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (400 கோடி டாலர்), பார்தி ஏர்டெல் (380 கோடி டாலர்) மற்றும் ரிலையன்ஸ் (350 கோடி டாலர்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.இந்தியாவைச் சேர்ந்த, பிரபலமான முதல், 100 நிறுவனங்களின் மொத்த சொத்து மதிப்பு, 9,260 கோடி டாலராக (5.56 லட்சம் கோடி ரூபாய்) உள்ளது என, அந்த ஆய்வு நிறுவனம் மேலும் தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|