பதிவு செய்த நாள்
19 ஆக2014
16:48

மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து 6வது நாளாக ஏற்றத்தில் முடிந்தன. மேலும் பங்குசந்தைகள் இன்றும் ஒரு புதிய உச்சத்தை தொட்டன. இன்றைய வர்த்தகநேர முடிவில், மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 29.71 புள்ளிகள் உயர்ந்து 26,420.67-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 23.25 புள்ளிகள் உயர்ந்து 7,897.50-புள்ளிகளாகவும் முடிந்து ஒரு புதிய உச்சத்தை தொட்டன. முன்னதாக வர்த்தகநேரத்தின் போது சென்செக்ஸ் அதிகபட்சமாக 26,530.67 புள்ளிகள் வரையிலும், நிப்டி முதன்முறையாக 7900 புள்ளிகளை கடந்து 7,918.55 புள்ளிகள் வரையிலும் சென்றன.
அந்நிய முதலீடுகள் அதிகரித்து வருவதாலும், முதல் காலாண்டில் முக்கிய நிறுவனங்களின் லாபம் உயர்ந்ததாலும் அது தொடர்பான பங்குகள் ஏற்றம் கண்டதால் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 19 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 11 நிறுவன பங்குகள் சரிந்தும் முடிந்தன. குறிப்பாக ஆட்டோமொபைல் தொடர்பான பங்குகள் 2.25 சதவீதமும், எரிசக்தி தொடர்பான பங்குகள் 1.25 சதவீதமும், பொதுத்துறை நிறுவன பங்குகள் 1 சதவீதமும் உயர்வுடன் இருந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|