பதிவு செய்த நாள்
29 ஆக2014
00:55

புதுடில்லி:மத்திய அரசு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’க்கு கூடுதல் அதிகாரமளிக்கும் புதிய சட்ட மசோதாவை, அரசிதழில் வெளியிட்டுள்ளது.நிறுவனங்கள், முறைகேடாக பல்வேறு திட்டங்கள் மூலம் முதலீட்டாளர்களிடமிருந்து நிதி திரட்டுவதை தடுக்க, ‘செபி’க்கு கூடுதல் அதிகாரம் அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பாதுகாப்பு சட்ட திருத்த மசோதா, அண்மையில் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது. இப்புதிய சட்டத்தின் மூலம், ‘செபி’, தவறு செய்பவர்களை கைது செய்வதோடு, அவர்கள் சொத்துகளையும் பறிமுதல் செய்யவும் முடியும். மேலும், வழக்கு தொடர்பான ஆதாரங்களையும் கேட்டு பெறலாம்.மோசடி தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனியாக, ‘செபி’ சிறப்பு விரைவு நீதிமன்றங்களை உருவாக்கி, விரைவாக விசாரணை நடத்தி நீதி வழங்கவும், இப்புதிய சட்டம் வழிவகை செய்கிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|