பதிவு செய்த நாள்
30 ஆக2014
16:32

புதுடில்லி: மத்தியில் புதிய அரசு அமைந்து 100 நாட்கள் ஆகியுள்ள நிலையில், தனது அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை (ரிப்போர்ட் கார்டு) மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வெளியிட்டுள்ளார். அறிக்கையை வெளியிட்டு ஜெட்லி பேசுகையில், மத்திய அரசு பொறுப்பேற்ற போது, நாடு பல்வேறு சவால்களை சந்தித்துக் கொண்டிருந்தது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல், வளர்ச்சியை அதிகரிப்பது, முதலீட்டை அதிகரிப்பது ஆகியவையே மத்திய அரசின் முக்கிய குறிக்கோளாக இருக்கிறது. நாட்டில் வரி பிரச்னைகளுக்கு தீர்வு காண சிறப்பு வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புத்துறையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை அனுமதிக்கும் நடைமுறை முக்கிய கட்டத்தில் உள்ளது. இன்சூரன்ஸ் மசோதா பார்லிமென்ட்டின் அடுத்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்திருந்தனர். மத்திய அரசு எடுத்துள்ள நீண்ட கால நோக்கிலான முடிவுகளின் பலன்கள் மெதுவாக தெரிய வரும். முதல் காலாண்டில் நாட்டின் வளர்ச்சி வகிதம் 5.7 சதவீதமாக இருப்பது நம்பிக்கை அளிக்கிறது. இனி வரும் காலங்களில் இந்த வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. இதன்மூலம் நாடு வளர்ச்சிக்கு பாதைக்கு திரும்புகிறது என்பதை இது காட்டுகிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு லோக்சபா தேர்தல் முடிவுகளும் முக்கிய காரணம். இவ்வாறு ஜெட்லி தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|