பதிவு செய்த நாள்
11 அக்2014
01:05

திண்டுக்கல்:விளைச்சல் அதிகரித்துள்ளதால், நெல்லிக்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு, பட்டிவீரன்பட்டி, சாணார்பட்டி, சிறுமலை அடிவாரம், பழநி பகுதிகளில் பெரிய நெல்லிக்காய், அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
கடந்த, மூன்று ஆண்டுகளாக மழை இல்லாதபோதும், நெல்லிக்காய் விளைச்சலில் பாதிப்பு ஏற்படவில்லை. ஆண்டுக்கு, மூன்று முறை நெல்லிக்காய் அறுவடை நடக்கிறது.சில மாதங்களுக்கு முன், கிலோ 40 ரூபாய்க்கு விற்ற பெரிய நெல்லிக்காய், தற்போது கிலோ 15 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நெல்லிக்காய் வரத்து அதிகரித்துள்ளதால், விலை குறைந்துள்ளது.
இது நெல்லி சாகுபடி விவசாயிகளை கடுமையாக பாதித்துள்ளது. களை எடுப்பு, மருந்து தெளிப்பு, தண்ணீர் பாய்ச்ச செலவு செய்த தொகையைக் கூட ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|