பதிவு செய்த நாள்
24 அக்2014
23:52

மங்களூரு:நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் (ஏப்., – செப்.,), மங்களூரு சர்வதேச விமான நிலையம் கையாண்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை, 4 சதவீதம் அதிகரித்து, 6.57 லட்சமாக வளர்ச்சி கண்டுள்ளது.இது, கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், 6.32 லட்சமாக இருந்தது என, விமான நிலைய இயக்குனர் ஜே.டி.ராதாகிருஷ்ணா தெரிவித்தார். கணக்கீட்டு காலத்தில், விமான நிலையம் கையாண்ட, சர்வதேச பயணிகள் எண்ணிக்கை, 1,91,952 லிருந்து, 2,36,789ஆக அதிகரித்துள்ளது. இது, 24 சதவீத வளர்ச்சி.அதேசமயம், உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை, 5 சதவீதம் குறைந்து, 4,40,309 லிருந்து, 4,19,052ஆக சரிவை கண்டுள்ளது. திருச்சி, மதுரை, திருப்பதி, போபால், அகமதாபாத், கவுகாத்தி மற்றும் புவனேஷ்வர் உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள விமான நிலையங்கள் கையாண்ட உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கையும் மதிப்பீட்டு காலத்தில் குறைந்தே உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|