தங்கம் விலை ரூ.16 குறைந்ததுதங்கம் விலை ரூ.16 குறைந்தது ... கச்சா எண்ணெய் இறக்குமதியைபரவலாக்க திட்டம்: தர்மேந்திர பிரதான் கச்சா எண்ணெய் இறக்குமதியைபரவலாக்க திட்டம்: தர்மேந்திர பிரதான் ...
நவரத்தினம், ஆபரணங்கள் ஏற்றுமதி ரூ.1.09 லட்சம் கோடியாக வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2014
04:14

மும்பை: நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான முதல் ஆறு மாத காலத்தில், நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, ரூபாய் மதிப்பின் அடிப்படையில், நிகர அளவில், 14.96 சதவீதம் வளர்ச்சி கண்டு, 1.09 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (ஜி.ஜே.இ.பி.சி.,) தற்காலிக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரங்கள்:கடந்த நிதியாண்டின் இதே காலத்தில், இவற்றின் ஏற்றுமதி, 94,959 கோடி ரூபாயாக இருந்தது.மேலும், டாலர் மதிப்பின் அடிப்படையிலும், நவரத்தினங்கள் மற்றும்ஆபரணங்கள் ஏற்றுமதி, கணக்கீட்டு காலத்தில், 12.74 சதவீதம் அதிகரித்து, 1,607 கோடி டாலரிலிருந்து, 1,812 கோடி டாலராக வளர்ச்சி கண்டுள்ளது.மதிப்பீட்டு ஆறு மாத காலத்தில், நறுக்கப்பட்ட மற்றும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஏற்றுமதி, 1.36 சதவீதம் குறைந்து, 73,804 கோடியிலிருந்து,72,798 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. மேலும், இவற்றின் ஏற்றுமதி அளவின் அடிப்படையிலும், 192 லட்சம் காரட்டிலிருந்து, 182 லட்சம் காரட்டாக குறைந்துள்ளது.அதேசமயம், தங்க ஆபரணங்கள் ஏற்றுமதி, 28.22 சதவீதம் அதிகரித்து, 21,472 கோடியிலிருந்து, 27,531 கோடி ரூபாயாக வளர்ச்சி கண்டுள்ளது.இருப்பினும், கணக்கீட்டு காலத்தில், தங்க பதக்கங்கள் மற்றும் நாணயங்கள் ஏற்றுமதி, 0.27 சதவீதம் குறைந்து, 6,080 கோடியிலிருந்து, 6,064 கோடி ரூபாயாக சற்று சரிவை சந்தித்துள்ளது.

வெள்ளி ஆபரணங்கள்:இதே போன்று, நவரத்தினங்கள் ஏற்றுமதியும், 35.56 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 2,099 கோடியிலிருந்து, 1,353 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், வெள்ளி ஆபரணங்கள் ஏற்றுமதி, 34.74 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4,680 கோடியிலிருந்து, 6,306 கோடி ரூபாயாக உயர்ந்து உள்ளது.அதேசமயம், கணக்கீட்டு காலத்தில், கச்சா வைரங்கள் ஏற்றுமதி, 3.15 சதவீதம் சரிவடைந்து, 4,768 கோடியிலிருந்து,4,618 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.இவற்றின் ஏற்றுமதி அளவின் அடிப்படையிலும், 30.66 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 247 லட்சம் காரட்டிலிருந்து, 171 லட்சம் காரட்டாக சரிவடைந்துள்ளது என, புள்ளி விவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)