பதிவு செய்த நாள்
29 அக்2014
04:28

மும்பை: முன்னணி நிறுவனங்களின் காலாண்டு நிதி நிலை முடிவுகள் நன்கு இருந்ததையடுத்து, பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது.குறிப்பாக, மருந்து துறையைச் சேர்ந்த ரான் பாக்சி லேபரட்டரீஸ் நிறுவனம், கடந்த ஆறு காலாண்டுகளில், முதன் முறையாக, நிகர லாபத்தை பதிவு செய்தது. இதையடுத்து, அந்நிறுவனப் பங்கின் விலை, 6.11 சதவீதம் வரை ஏற்றம் கண்டன.இந்நிலையில், ரிசர்வ் வங்கி, அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிடவுள்ள அதன் நிதி ஆய்வு கொள்கையில், முக்கிய கடனுக்கான வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற நிலைப்பாட்டால், வங்கி துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கும், முதலீட்டாளர்களிடையே அதிக தேவை காணப்பட்டது.
இதையடுத்து, ‘சென்செக்ஸ்’ கடந்த ஒரு மாதங்களில் காணப்படாத வகையில், உயர்ந்தபட்ச அளவுடன் நிறைவடைந்தது.கடந்த ஆறு நாட்களில், நான்காவது முறையாக, ஐரோப்பிய சந்தைகளிலும் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 127.92 புள்ளிகள் அதிகரித்து, 26,880.82 புள்ளிகளில் நிலைகொண்டது.‘சென்செக்ஸ்’ கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், சன்பார்மா, சிப்லா, டாட்டா மோட்டார்ஸ் உள்ளிட்ட, 17 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், பார்தி ஏர்டெல், மாருதி, இந்துஸ்தான் யூனிலிவர் உள்ளிட்ட, 13 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், ‘நிப்டி’, 35.90 புள்ளிகள் உயர்ந்து, 8,027.60 புள்ளிகளில் நிலைபெற்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|