பதிவு செய்த நாள்
29 அக்2014
10:06

மும்பை : முன்னணி நிறுவனங்களில் காலாண்டு லாபம் அதிகரித்துள்ளதன் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்ய காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து ஏற்றமான போக்கே காணப்படுகிறது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (அக்டோபர் 29 காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 150 புள்ளிகளுக்கு மேல் அதிகரித்து 27,000 புள்ளிகளை எட்டி உள்ளது.
வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 150.26 புள்ளிகள் அதிகரித்து 27,031.08 புள்ளிகளாகவும், நிப்டி 38.80 புள்ளிகள் உயர்ந்து 8066.40 புள்ளிகளாகவும் உள்ளன. ஆட்டோ, கட்டுமானம், எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட துறை நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்து வருவதால் பங்குச் சந்தைகளில் ஏற்றம் காணப்படுகிறது. செப்டம்பர் 23ம் தேதிக்கு பிறகு சென்செக்ஸ் தற்போது மீண்டும் 27,000 புள்ளிகளை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசிய சந்தைகளை பொறுத்தவரை ஜப்பான், ஹாங்காங் உள்ளிட்ட சந்தைகள் ஏற்றத்துடனேயே காணப்படுகின்றன. அதேசமயம் அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிவுடனேயே முடிவடைந்துள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|