பதிவு செய்த நாள்
11 நவ2014
16:23

மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து உச்சம் பெற்று வரும் நிலையில் நிப்டி இன்று(நவ. 11ம் தேதி) புதிய உச்சத்தை தொட்டது. ஆசிய பங்குசந்தைகளில் காணப்ட்ட ஏற்றம், வெளிநாட்டு முதலீடுகள் அதிகரித்தது மற்றும் மத்திய அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள மாற்றம் போன்றவற்றால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் துவங்கியது. தொடர்ந்து உயர்வுடன் இருந்த பங்குசந்தைகள் வர்த்தகநேர முடிவின் போது உயர்வுடனேயே முடிந்தன. நிப்டி இன்று புதிய உச்சத்தை தொட்டது.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் 35.33 புள்ளிகள் உயர்ந்து 27,910.06-ஆகவும், தேசிய பங்குசந்தையான நிப்டி 18.40 புள்ளிகள் உயர்ந்து 8,362.65 எனும் புதிய உச்சத்தை தொட்டது.
இன்றைய வர்த்தகத்தில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவன பங்குகள் 3 சதவீதம் உயர்ந்தன. இவை தவிர்த்து டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி, கெயில், எச்டிஎப்சி., உள்ளிட்ட நிறுவன பங்குகளும் உயர்வுடன் முடிந்தன. அதேசமயம் பெல், ஐடிசி., இன்போசிஸ் போன்ற நிறுவன பங்குகள் சரிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|