பதிவு செய்த நாள்
04 டிச2014
16:11

மும்பை : கடந்த இருநாட்களாக மந்தமாக இருந்த பங்குசந்தைகள் இன்று(டிச., 4ம் தேதி) உயர்வுடன் முடிந்தன. ஆசிய பங்குசந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் மற்றும் ஐடிசி., உள்ளிட்ட புகையிலை தொடர்பான பங்குகள் ஏற்றம் கண்டதன் விளைவு போன்ற காரணங்களால் இந்திய பங்குசந்தைகள் உயர்வுடன் முடிந்தன. வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையான குறியீட்டு எண் சென்செக்ஸ் 120.11 புள்ளிகள் உயர்ந்து 28,562.82-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 26.75 புள்ளிகள் உயர்ந்து 8,564.40-ஆகவும் முடிந்தன. முன்னதாக வர்த்தகநேரத்தின் போது நிப்டி 8,629.95 புள்ளிகளை தொட்டு புதிய உச்சத்தை தொட்டன.
இன்றைய வர்த்தகத்தில் 1489 நிறுவன பங்குகள் உயர்வுடனும், 1459 நிறுவன பங்குகள் சரிந்தும், 124 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன. ஐடிசி நிறுவன பங்குகள் அதிகபட்சமாக 6 சதவீதம் உயர்வுடன் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|