சீன ‘பென் டிரைவ்’­க­ளுக்குபொருள் குவிப்பு வரி?சீன ‘பென் டிரைவ்’­க­ளுக்குபொருள் குவிப்பு வரி? ... அடுத்தடுத்து விருதுகளை குவிக்கும் அமர்பிரகாஷ் அடுத்தடுத்து விருதுகளை குவிக்கும் அமர்பிரகாஷ் ...
கோவை, திருப்பூர் தொழில் துறையினர் சோர்ந்தால், தமிழக தொழில் துறை சோர்ந்து விடும்: நிர்மலா சீதாராமன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 டிச
2014
01:13

கோவை:'கோவை, திருப்பூர் தொழில் துறையினரின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்,'' என்று, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.
தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த ஜவுளி உற்பத்தி அமைப்பினர் சார்பில், 'ஜவுளி தொழிலில் வாய்ப்புகள் மற்றும் சவால்கள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கு, கோவை, லீ மெரிடியன் ஓட்டலில் நடந்தது.
இதில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசியதாவது: கோவை மற்றும் திருப்பூர் தொழில் துறையினர் தெரிவித்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்படும். தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளவற்றை நீக்குவதற்கு நீங்கள் தான் வழி சொல்ல வேண்டும்.ஏற்றுமதிக்கு வாய்ப்புள்ள பொருட்கள் குறித்த சரியான புள்ளிவிவரங்கள் இன்று நம்மிடம் இல்லாதது, தொழில் வளர்ச்சிக்கு பெரும் சவாலாக உள்ளது. தேசிய அளவில், தொழில் செய்வதற்கான வழிமுறைகளை எளிமையாக்க, பழைய சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்.
இதற்காக, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் தலைமையில், அனைத்து மாநில செயலாளர்களும் பங்கேற்கும் சிறப்பு கூட்டம் நடக்கிறது. மத்தியில் பா.ஜ., அரசு பொறுப்பேற்ற நாள் முதல், தேசிய அளவில் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கேற்ப, ஆறு மாதங்களில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம்.கோவை, திருப்பூர் தொழில் துறையினர் சோர்ந்தால், தமிழக தொழில் துறை சோர்ந்து விடும். மாற்றம் உங்கள் கையில் உள்ளது. தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். உங்கள் கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படும். தொழில் வளர்ச்சிக்கு எனது உயிர் மூச்சை வழங்கி பாடுபடுவேன் என, உறுதியளிக்கிறேன்.இவ்வாறு, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்
முன்னதாக, கோவை டெக்ஸ்பிரனர்ஸ், அமைப்பின் செயலாளர் பிரபு தாமோதரன் வரவேற்றார். 'தொழில் கொள்கை வாய்ப்புகள் மற்றும் சவால்கள்' என்ற தலைப்பில், டெக்ஸ்பிரனர்ஸ் ஆலோசகர் ரிதீஷ், எளிமைப்படுத்தப்பட்ட ஜவுளித் தொழில் என்ற தலைப்பில், ஸ்ரீஹரிபாலகிருஷ்ணன், 'சவால்கள், தீர்வுகள்' என்ற தலைப்பில், ஜவுளித் தொழில் துறை ஆலோசகர் ராமநாதன் உள்ளிட்டோர் பேசினர்.
தமிழகத்தில் ஜவுளித்தொழில் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. தமிழ்நாடு நூற்பாலை சங்க தலைவர் அப்புக்குட்டி, கரூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் நாச்சிமுத்து, ஈரோடு ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்ரமணியம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்க தலைவர் ஈஸ்வரன், செயற்குழு உறுப்பினர் முருகேஷ், ஆந்திரா நூற்பாலை சங்க நிர்வாகிகள் உள்பட ஜவுளித்தொழில் துறையினர் பலர் பங்கேற்றனர்.
கவலைப்படாதீங்க., விரைவில் வரும் ; ஜவுளி ஆராய்ச்சி மையம்
திருப்பூர் : ""சீரான பாதையில் செல்லும் பனியன் தொழிலுக்கு தேவையான உதவியை செய்ய, மத்திய அரசு எந்நேரமும் சித்தமாக இருக்கிறது. பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி, திருப்பூர் தொழில் நகரையும், பனியன் தொழிலையும் மேம்படுத்த பாடுபடுவோம்,'' என, மத்திய இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். . இந்நிகழ்ச்சியை தினமலர் இணையதளம் நேரடி ஒளிபரப்பு செய்தது. பின்னலாடை துறையினருக்கு தொழில்நுட்ப ஆலோசனை வழங்கும் "வெற்றிப்பாதையில் திருப்பூர்' நிகழ்ச்சி, நிப்ட்-டீ கல்லூரி, ஸ்ரீபுரம் அறக்கட்டளை, திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு ஆகிய அமைப்புகள் சார்பில் வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் நடந்தது. இந்திய தொழில் கூட்டமைப்பு திருப்பூர் மாவட்ட கவுன்சில் தலைவர் ராஜா சண்முகம் தலைமை வகித்தார். ஸ்ரீபுரம் அறக்கட்டளை நிர்வாகி விஜயகுமார் வரவேற்றார்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
கடந்த 1925ல், திருப்பூரில் கால்பதித்த பனியன் தொழில், சுயம்பு லிங்கத்தைபோல், மத்திய, மாநில அரசுகள் உதவியின்றி, தானாக முன்னேறி, வெற்றிப்பாதையில் பயணிக்கிறது. மத்திய அரசின் "எகோ-சிஸ்டம்' என்ற கொள்கைப்படி, பனியன் தொழில் வளரும்போது, அதை சார்ந்துள்ள பிற தொழில்களும் வளர்ச்சி பெறுவது பாராட்டுக்குரியது.

உலக புகழ் பெற்றுள்ள திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினருக்கு ஆலோசனை தேவையில்லை. உலகில் எங்கும் இல்லாத "ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பம் இங்கு செயல்படுத்தப்படுகிறது. வரும் 2020ல் "ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம் என சீனா போன்ற நாடுகள் திட்டமிட்டு வரும் நிலையில், கடந்த நான்கு ஆண்டுகளாக, அத்தொழில்நுட்பம் இங்கு பயன்பாட்டில் உள்ளது வியக்கத்தக்கது.

தொழில் துறையின் தேவையை அரசு பூர்த்தி செய்யும் : சீரான பாதையில் செல்லும் பனியன் தொழிலுக்கு தேவையான உதவியை செய்ய, மத்திய அரசு எந்நேரமும் சித்தமாக இருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு முயற்சித்தாலும், புதிதாக ஒரு பகுதியில் தொழிலை ஏற்படுத்துவது சிரமம்; அத்தகைய பல முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளன. ஒன்றுபட்ட உழைப்பால், திருப்பூரில் பனியன் தொழில் தானாக வளர்ந்தது. இனி, திருப்பூரை போல் மற்றொரு தொழில் நகரை திட்டமிட்டு உருவாக்க முடியாது. உன்னத ஸ்தானத்தை பெற்ற திருப்பூருக்கு என தனியான "பிராண்ட்' உருவாகாதது வருத்தமாக உள்ளது.

திருப்பூரில் தயாராகும் டீ-சர்ட் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டாலும், திருப்பூரில் தயாரித்தது என்ற தனி மதிப்பு கிடைப்பதில்லை. சிறு, குறு தொழில்துறையினரை உருவாக்க, 10 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியிருந்தது. ஆனால், திருப்பூரில் இருந்து யாரும் விண்ணப்பிக்கவில்லை. பனியன் தொழில்துறையினரின் தேவையை மத்திய அரசு பூர்த்தி செய்யும். பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி, திருப்பூர் தொழில் நகரையும், பனியன் தொழிலையும் மேம்படுத்த பாடுபடுவோம். பெண்களை குழுக்களாக இணைத்து, தொழில் முனைவோர்களாக உருவாக்க வேண்டும். பின்னலாடை தொழிலுக்கு ஜவுளி ஆராய்ச்சி மையம் உட்பட அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும்.

தடைகள் தகர்த்தெறியப்படும் ; கோவை, திருப்பூர் பகுதிகள் இயற்கையாகவே தொழில் வளம் மிகுந்ததாகவும், திறமையான தொழிலாளர்கள், தொழிலதிபர்களாலும் வளர்ச்சி அடைந்துள்ளன. நாம், எதற்கெடுத்தாலு<ம், சீனா பொருட்களை பற்றி பேசுகிறோம்; அதற்கு தன்னம்பிக்கை இல்லாததே காரணம்.

பிரதமர் மோடியின், "மேக் இன் இந்தியா' திட்டத்தின் தத்துவமே, முதலில், நாம் மனதளவில் தயாராக வேண்டும். நம்மாளும் உலக அளவில், சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத, தரமான பொருட்களை உற்பத்தி செய்து சந்தைப்படுத்த முடியும் என்ற உறுதியை ஏற்படுத்துவது; ஓங்கி உரக்க அடித்தால் போதும்; சாதிக்கலாம்.

அதேபோல், தொழில் வளர்ச்சியை பாதிக்கும் விஷயங்களாக, உரிமம் பெறுவது, அரசு துறைகளை தொடர்பு கொள்வது, வழிமுறைகள், சட்டங்கள், அதிக மன அழுத்தம் தரும் ஆய்வுகள் என பல்வேறு இடையூறுகள் காணப்படுகின்றன. வெளிநாட்டு முதலீடுகளும், அதனால் தடைபடுகின்றன. பல துறைகளுக்கு அலைந்து, வெளிநாட்டில் பதிவு செய்து, இங்கு தொழிற்சாலை அமைக்கிறோம் என கூறுகின்றனர். இதற்கு தீர்வு ஏற்படுத்தி, ஒவ்வொரு இந்தியனும் உற்பத்தி செய்யும் பொருட்கள், உலக அளவில் பிரபலமாவதற்கு, உறுதியான நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். தொழில் துவங்குவதற்கு, தொழில் வளர்ச்சிக்கு ஏற்படும் அனைத்து தடைகளும் தகர்த்து எறியப்படும்.

இதற்காக, பிரதமர் மோடி தலைமையில், வரும் 29ல், டில்லியில் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் தொழில் சார்ந்த அனைத்து துறை அமைச்சர்கள், செயலர்கள் பங்கேற்கின்றனர். அனைத்து மாநிலங்களின் தலைமை செயலர்கள், தொழில் துறை செயலர்கள் பங்கேற்று, ஒரு நாள் முழுவதும் விவாதித்து, இறுதி முடிவு எடுக்க உள்ளோம்.

வெற்றிப்பாதையில் செல்வோம் : ஒரு தொழில் துவங்குவதற்கு விண்ணப்பித்து விட்டு, அரசு துறைகளிடம் இருந்து 30 நாட்களுக்குள் உங்களுக்கு பதில் வரவில்லை எனில், அந்த தாமதமே, உங்களுக்கு அனுமதி வழங்குவதாக எடுத்துக் கொள்ளும் வகையிலான மாற்றங்கள் உருவாகும். பல பைல்கள், பல ஆவணங்கள், பல அரசு துறைகளுக்கு அலைய வேண்டிய நடைமுறைக்கு, அக்கூட்டத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஒரே காகிதத்தில், அனைத்து பணிகளும் முடியும் வகையில், உத்தரவு பிறப்பிக்கப்படும். "அனைத்து மாநிலங்களிலும், தொழில் வளர்ச்சி சமச்சீராக இருக்க வேண்டும்; பரவலாக்க வேண்டும். தொழில் வளர்ச்சி 8 சதவீதம், 10 சதவீதம் என இருந்தாலும், ஒரு மாநிலம் வளர்ச்சியடையா விட்டால் பலன் இருக்காது,' என, பிரதமர் மோடி அடிக்கடி கூறுவார். அதன் அடிப்படையில், மத்திய, மாநில அரசுகள் இணைந்து, தொழில் துறையை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்வோம். சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளை பார்த்து பயப்பட வேண்டாம்; நாமும் சாதிப்போம். இவ்வாறு, நிர்மலா சீதாராமன் பேசினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)