பதிவு செய்த நாள்
29 டிச2014
02:31

தேனி:தேனி மாவட்டத்தில் சின்னமனுார் பகுதியில் இருந்து கூடலுார் வரை சாகுபடி செய்யப்படும் திசு வாழை அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.மாவட்டத்தில் பத்தாயிரம் ஏக்கர் பரப்பில் திசு வாழை சாகுபடி நடக்கிறது. தேனி வாழை தென் ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு வாழை நாற்றுக்கு 80 ரூபாய் செலவு செய்யவேண்டும். ஒரு தாருக்கு 300 ரூபாய் கிடைக்கும்.
இந்த வாழைகளை குளிர் பதன கிடங்கில் வைத்து காற்று புகாத வகையில் ‘பேக்’ செய்து துாத்துக்குடியில் இருந்து கப்பல் மூலம் வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.அதிகபட்சமாக ஒரு மாத காலம் வரை கப்பலில் பயணம் செய்யும் இந்த வாழை வெளிநாடுகளுக்கு சென்றடைகிறது.இது குறித்து சடையால்பட்டி வாழை விவசாயி வெங்கடேஷ் கூறியதாவது:இங்குள்ள மண், நீர் வளம் உள்ளிட்டவற்றால் திசு வாழை ரகங்களுக்கு நல்ல ருசி உள்ளது. இதனால் வெளிநாடுகளில் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் திடீரென சூறாவளி உள்ளிட்ட இயற்கை பேரிடர் சேதம் ஏற்படாமல் இருக்கவேண்டும்.
நவீன தொழில்நுட்பம் முலம் ‘பேக்’ செய்து அனுப்பவேண்டும். ஏதாவது குறைபாடு இருந்தால் வெளிநாட்டில் வாழைத்தார் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. கப்பலையே திருப்பி அனுப்பி விடுவர். இருந்தாலும் திராட்சை உள்ளிட்ட விவசாயத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது வாழை சாகுபடி விவசாயிகளுக்கு கை கொடுத்துவருகிறது, என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|