பதிவு செய்த நாள்
29 டிச2014
03:48

ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் பெல்லாரி வெங்காயம் விலை கிலோவிற்கு ரூ.10 அதிகரித்துள்ளது.ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு பக்கத்து மாவட்டங்களில் அறுவடை செய்யப்படும் காய்கறிகளும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. உள்ளூர் பகுதிகளில் இருந்து பெல்லாரி வெங்காய வரத்து முற்றிலும் இல்லை. கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் விளைந்த ெபல்லாரி வெங்காயம் தினமும் லாரிகளில் கொண்டு வரப்படுகிறது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.20க்கு விற்றது. இது நேற்று கிலோவிற்கு ரூ.10 வரை அதிகரித்து ரூ.30க்கு விற்றது.இதே போல் கடந்த வாரம் ரூ.10க்கு விற்ற பீன்ஸ் ரூ.14க்கும், ரூ.13க்கு வெண்டைக்காய் ரூ.17க்கும், ரூ.2க்கு விற்ற சுரைக்காய் ரூ.4க்கும், ரூ.15க்கு விற்ற கொத்தவரை ரூ.17க்கும் விற்றது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|