பதிவு செய்த நாள்
07 மே2015
17:42

மும்பை : இந்திய பங்குசந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக சரிவுடன் முடிந்தன. சரிவுடன் துவங்கிய இன்றைய வர்த்தகம், ரூபாயின் மதிப்பு கடந்த 20 மாதங்களில் அல்லாத அளவுக்கு கடுமையா சரிந்தது, வரிவிதிப்பு பயத்தால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவு பங்குகளை விற்பனை செய்வது, நிறுவனங்களின் காலாண்டு நிதிநிலை எதிர்பார்த்த அளவுக்கு இல்லாதது போன்ற காரணங்களால் தொடர்ந்து பங்குசந்தைகள் சரிவுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 118.26 புள்ளிகள் சரிந்து 26,599.11-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 39.70 புள்ளிகள் சரிந்து 8,057.30-ஆகவும் முடிந்தது.
இன்றைய வர்த்தகத்தில் ஆக்சிஸ் வங்கி 2.95 சதவீதமும், ஓஎன்ஜிசி., 2.94 சதவீதமும், மாருதி சுசூகி 2.52 சதவீதமும், ஹிண்டால்கோ 2.47 சதவீதமும், ஐசிஐசிஐ., 2.44 சதவீதமும், டாடா பவர் 2.32 சதவீதமும், டாடா மோட்டார்ஸ் 1.90 சதவீதமும் சரிந்தன.
அதேசமயம் ரூபாயின் மதிப்பு சரிவால் டிசிஎஸ்., விப்ரோ மற்றும் இன்போசிஸ் நிறுவன பங்குகள் உயர்வுடன் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|