பதிவு செய்த நாள்
23 ஆக2015
09:58
மிட்சுபிஷி கார் தயாரிப்பு நிறுவனம், தன், பெஜேரோ மாடல் வரிசையில், புதிதாக, சந்தைப்படுத்த உள்ள, ‘ஸ்போர்ட்’ வாகனத்தின், தோற்றத்தை வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்த தோற்றத்தில், பெரிய மாற்றம் இல்லாத போதும், ஜெனீவா கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருந்த, ஜி.ஆர்.,- – எச்.இ.வி., வாகனத்தின், தோற்ற அடிப்படையில், சில மாற்றங்கள் இதில் செய்யப்பட்டுள்ளது.முன்புறமாக குவிந்த நிலையில் உள்ள, ‘பான்னட்’ கூடுதல் பொலிவை தருகிறது. பகலிலும், மெல்லியதாக பிரகாசிக்கும், சிறிய எல்.இ.டி., விளக்குகள், அழகுற காட்சியளிக்கின்றன. புதிய பம்பர், அகலமான கிரில் ஆகியவற்றில் குரோம் உலோகம், அள்ளி தெளிக்கப்பட்டு உள்ளது. ‘டெயில் லைட்’ ஜி.ஆர்., வடிவமைப்பில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த அம்சங்கள், வாடிக்கையாளரை பெரிதும் கவரும்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|