பதிவு செய்த நாள்
13 செப்2015
14:29
டாடா நிறுவனத்தின், ‘செஸ்ட்’ கார் அறிமுகம் செய்யப்பட்டு, ஓராண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், சில மாற்றங்கள் செய்து, புதிய காரை சிறப்பு விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ‘செஸ்ட்’ காரின் எக்ஸ்.எம்.எஸ்., மாடலின், பெட்ரோல் மற்றும் டீசல் கார்களில் மட்டும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்தக் கார், வெள்ளை நிறத்தில் உள்ளது. முன்புற, ‘பம்பர்’ காருடைய கலருக்கே வடிவமைக்கப்பட்டு உள்ளது. பக்கவாட்டு கண்ணாடிகள், பளபளக்கும் கறுப்பு நிறத்தில் உள்ளன. இருக்கை அருகேயுள்ள பக்கவாட்டு கண்ணாடி திரைச்சீலைகள், ‘ரிமோட்டில்’ இயங்கக் கூடியவை. குடிநீர் பாட்டில் வைக்க தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் கார் விலை, 5.89 லட்சம் ரூபாயில் இருந்தும், டீசல் கார் விலை, 6.94 லட்சம் ரூபாயில் இருந்தும் துவங்குகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|