பதிவு செய்த நாள்
23 ஜன2016
12:52

புதுடில்லி: தங்கத்தை பணமாக்கும் திட்டத்தில், முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால், அதில் ஏராளமானோர் முதலீடு செய்யும் விதத்தில், முன்னதாகவே திரும்பப் பெறக் கூடிய வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
உலகிலேயே அதிக அளவில் தங்கத்தை பயன்படுத்தும் நாடாக இந்தியா இருப்பதால், வெளிநாடுகளில் இருந்து ஆண்டுக்கு, பல ஆயிரம் டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் அதிக அளவில், அன்னிய செலாவணி வீணாவதை தடுக்கும் வகையில், வீடுகளிலும், கோவில்களிலும் முடங்கியிருக்கும், 52 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 20 ஆயிரம் டன் தங்கத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர, தங்கத்தை பணமாக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ், பயன்படுத்தாத தங்கத்தை முதலீடு செய்து, அதற்கு வட்டியைப் பெறலாம். முதலீட்டு காலத்துக்குப் பின், தங்கமாக அல்லது பணமாகப் பெறலாம். அதிக முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக, திட்டத்தில் சில மாற்றங்களை, ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது. அதன் படி, முதலீட்டு காலத்துக்கு முன்பாகவே, திரும்பப் பெற முடியும்; ஆனால், வட்டி வீதம் குறையும்.
புதிய அறிவிப்புகள்* குறுகிய கால முதலீடு (1 --- 3 ஆண்டுகள்), இடைக்கால முதலீடு (5 - 7 ஆண்டுகள்), நீண்ட கால முதலீடு (12 - 15 ஆண்டுகள்) ஆகிய மூன்று திட்டங்கள் உள்ளன* தற்போது இடைக்கால முதலீட்டுக்கு, ஆண்டுக்கு, 2.25 சதவீதம், நீண்ட கால முதலீட்டுக்கு ஆண்டுக்கு, 2.5 சதவீத வட்டி தரப்படுகிறது* இடைக்கால முதலீட்டில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், நீண்ட கால முதலீட்டில், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும், முதலீட்டை திரும்பப் பெறலாம்* முதலீட்டு காலம், முன்னரே எடுக்கப்படும் காலம் ஆகியவற்றின் அடிப்படையில், வட்டி வீதம் குறையும்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|