ஆச்சர்யமாக இருக்கிறது! தொழில் முத­லீடு ஒப்­பந்­தங்­களை ஈர்ப்­பதில் கேரளா முன்­னணிஆச்சர்யமாக இருக்கிறது! தொழில் முத­லீடு ஒப்­பந்­தங்­களை ஈர்ப்­பதில் கேரளா ... ... சரிவிலிருந்து மீண்டது ரூபாய் மதிப்பு - ரூ.68.34-ல் வர்த்தகம் சரிவிலிருந்து மீண்டது ரூபாய் மதிப்பு - ரூ.68.34-ல் வர்த்தகம் ...
மருந்து துறை: சர்­வ­தேச மைய­மாக இந்­தியா உரு­வாகும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2016
06:22

மும்பை : ‘‘மருந்து துறையில், சர்­வ­தேச மைய­மாக இந்­தியா உரு­வாகும்,’’ என, மத்­திய, மருந்து, ரசா­யனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர், ஹன்ஸ்ராஜ் கங்­காராம் ஆஹிர் நம்­பிக்கை தெரி­வித்­துள்ளார்.
மும்­பையில், ‘மேக் இன் இந்­தியா வாரம்’ விழா­வை­யொட்டி, மருந்து துறையின் கருத்­த­ரங்கை, ஹன்ஸ்ராஜ் துவக்கி வைத்து மேலும் பேசி­ய­தா­வது: மருந்­து­களின் உற்­பத்­தியை அதி­க­ரிப்­பது தொடர்­பாக, மாநில அர­சு­க­ளுடன் கலந்து பேசி வரு­கிறோம். மருந்து தொழிற்­சா­லை­களை அமைக்கத் தேவை­யான நிலத்தை கைய­கப்­ப­டுத்­து­வது, சுற்­றுச்­சூழல் துறையின் அனு­ம­தியை பெறு­வது உள்­ளிட்­ட­வற்றில் காணப்­படும் அனைத்து பிரச்­னை­க­ளுக்கும் தீர்வு காண, மத்­திய அரசு உறுதி பூண்­டுள்­ளது.
அதே­ ச­மயம், மக்கள் சுல­ப­மாக வாங்கும் வகையில், மருந்து விலையை கட்­டுப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கி­றது. முன்னர், மூலப் பொருட்­க­ளுக்கும், அவற்றின் மூலம் தயா­ரிக்­கப்­படும் பொருட்­க­ளுக்கும், வரி விதிப்பில், அதிக வேறு­பாடு இருந்­தது; அதில், தற்­போது மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளது. இதனால், மருந்து உள்­ளிட்ட அனைத்து துறை­களும் பயன்­பெறும். மஹா­ராஷ்­டிர அரசு, தயா­ரிப்பு துறை­யுடன், பொருட்­களை சந்­தைப்­ப­டுத்தும் சூழ­லையும், முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு ஏற்­ற­வாறு சாத­க­மாக உரு­வாக்­கி­யி­ருப்­பது, பாராட்­டத்­தக்­கது. உல­க அ­ளவில், மூல மருந்­துகள், மருந்­துகள் தயா­ரிப்­பிலும், நியா­ய­மான விலையில் மருந்­து­களை விற்­பனை செய்­வ­திலும், இந்­தியா முன்­னி­லையில் உள்­ளது. சுல­ப­மான வர்த்­தக நடை­முறையால், இந்­திய மருந்து துறை, சர்­வ­தேச மைய­மாக உருவாகும்.
சர்­வ­தேச மருந்து மைய­மாக உரு­வாகும் ஆற்றல், இந்­தி­யா­விற்கு உள்­ளது. மருந்து துறைக்கு, சர்­வ­தேச தரத்­திற்கு நிக­ரான ஒழுங்­கு­மு­றையை உரு­வாக்­கினால், இது சாத்­தி­ய­மாகும்.-திலிப் சிங்வி, நிர்­வாக இயக்­குனர், சன் பார்மாசூட்­டிகல்ஸ்
இந்­தி­யாவில், அமெ­ரிக்க மருந்து நிர்­வா­கத்தின் விதி­மு­றை­களை கடை­பி­டிக்கும், மருந்து தொழிற்­சா­லைகள் அதிகம் உள்­ளன. இந்­திய மருந்து துறை, 2020ல், 5,500 கோடி டால­ராக வளர்ச்சி பெறும்.-பங்கஜ் படேல், மூத்த துணை தலைவர், ‘பிக்கி’ அமைப்பு
நம் நாட்டில் செல்­வத்தை உரு­வாக்கும் வேலை ஓர் உள­வியல் தடை­யாக மாறி­யுள்­ளது. அது வேலை­வாய்ப்­பு­களை தோற்றுவிப்பதில் பிரச்­னை­களை ஏற்­ப­டுத்­து­கி­றது. செல்­வத்தை உரு­வாக்­கு­வது என்றால், அது கஜா­னாவை சூறை­யா­டு­வது என்று அர்த்­த­மல்ல! ஒருவர் தன் திற­மையால் செல்­வத்தை உரு­வாக்க முடியும் என்றால், அது நுாற்­றுக்­க­ணக்­கானவர்­க­ளுக்கு வேலை­களை உரு­வாக்கும் கார­ணி­யாக அமை­கி­றது. ஆனால், அவரை நாம் ஒரு பாவி என்றே பார்க்­கிறோம். அந்த மன­நி­லையை மாற்ற வேண்டும். அது நடந்தால், நிறைய விஷ­யங்கள் மாறும்.-மனோகர் பாரிக்கர் மத்­திய அமைச்சர், வத்­வானி பவுண்டேஷன் நடத்­திய வேலை வாய்ப்பு மாநாட்டில்...

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)