பதிவு செய்த நாள்
19 பிப்2016
04:53

மும்பை : மும்பையில், நேற்றுடன் முடிவடைந்த,
‘மேக் இன் இந்தியா’ வார விழாவில், 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு
திட்டங்கள் குவிந்தன.‘‘இத்திட்டங்கள் தொடர்பாக, 2,594 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
கையெழுத்தாகியுள்ளன,’’ என, மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்தார்.
அதிகபட்சமாக, மும்பையை உள்ளடக்கிய, கொன்கன் பிராந்தியத்தில், 3.25
லட்சம் கோடி ரூபாய் முதலீட்டு திட்டங்கள் குவிந்தன. மிகவும் பின்தங்கிய, மரத்வாடா,
விதர்பா பிராந்தியங்களில், 1.50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய, நிறுவனங்கள்
திட்டமிட்டுள்ளன. எரிசக்தி, ரியல் எஸ்டேட், ஜவுளி, குறு,சிறு மற்றும் நடுத்தர
தொழில்கள், ஐ.டி., சுற்றுலா, மருந்து, திறன் மேம்பாடு, துறைமுகங்கள், சில்லரை
விற்பனை உள்ளிட்ட துறைகளில் அதிக அளவில், ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|