பதிவு செய்த நாள்
19 பிப்2016
04:59

புதுடில்லி : சரக்கு போக்குவரத்தில் வருவாய்
குறைந்துள்ளதால், இந்திய ரயில்வே, மாற்று வழிகளை யோசிக்கத் துவங்கியுள்ளது.தற்போது
சரக்கு ரயில்களில், நிலக்கரி, இரும்புத் தாது, உருக்கு, சிமென்ட், கனிமங்கள்,
உரங்கள், உணவு தானியங்கள் ஆகியவை மட்டுமே எடுத்துச் செல்லப்படுகின்றன.
இனி, கார், ‘வேன், மினி டிரக்’ உள்ளிட்ட வாகனங்கள், ‘டிவி, வாஷிங் மிஷின்’ போன்ற
நுகர்வோர் சாதனங்கள் ஆகியவற்றையும் கையாள, இந்திய ரயில்வே முடிவு செய்துஉள்ளது.
இதற்காக, பிரத்யேகமாக, ‘ரோடு ரயிலர்’ வண்டிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இவை, தண்டவாளத்திலும், சாலையிலும் செல்லக் கூடியவை. இதன் மூலம், இந்திய
ரயில்வே, தொழிற்சாலையில் இருந்து வாகனங்களை எடுத்துச் சென்று, மொத்த விற்பனையாளர்களின்
கிடங்குகளுக்கு, நேரடியாக சப்ளை செய்ய முடியும். ரோடு ரயிலர் சோதனை ஓட்டம்
வெற்றி பெற்றதை அடுத்து, விரைவில், டில்லி – சென்னை ரயில் மார்க்கத்தில், இச்சேவை
அறிமுகமாக உள்ளது. இத்திட்டத்தை விரிவுபடுத்துவதன் மூலம், இந்திய
ரயில்வேயின் சரக்கு போக்குவரத்து வருவாய் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, 25ம் தேதி ரயில்வே பட்ஜெட்டில்
வெளியாகும் என, தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|