பதிவு செய்த நாள்
24 பிப்2016
00:41
சென்னை : டி.வி.எஸ்., மோட்டார்ஸ், ‘டி.வி.எஸ்., விக்டர்’ என்ற இரு சக்கர வாகனத்தின் மாடலை மேம்படுத்தி, அண்மையில் மீண்டும் அறிமுகம் செய்தது. தற்போது, இந்த வாகனம், அதிகளவில் விற்பனையாகி வருகிறது. இதனால், இரு சக்கர வாகன சந்தையில், டி.வி.எஸ்., நிறுவனத்தின் பங்கு, 2017ல், 16 சதவீதமாக அதிகரிக்கும் என தெரிகிறது. இதுகுறித்து, டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சேவை பிரிவு துணை தலைவர் ஜே.எஸ்.சீனிவாசன் கூறியதாவது:தமிழகத்தில், மோட்டார் வாகன சந்தையில், டி.வி.எஸ்., மோட்டார்ஸ் பங்கு, 31 சதவீதம் என்றளவில் உள்ளது. இது, 2017ல், 35 சதவீதமாக உயரும். கடந்த இரண்டு ஆண்டுகளில், இரு சக்கர வாகன துறை, 10 – 12 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால், டி.வி.எஸ்., நிறுவனம், 30 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|