பதிவு செய்த நாள்
01 மார்2016
23:39

பனாஜி : கோவாவில் நடக்கும் பாதுகாப்பு துறை கண்காட்சிக்கு, இந்திய தொழிலக கூட்டமைப்பு, தேவையான உதவிகளை செய்ய உள்ளது. இதுகுறித்து, சி.ஐ.ஐ., என்ற இந்திய தொழிலக கூட்டமைப்பின் கோவா மாநில துணை தலைவர் ஷேக்கார் சர்தேசாய் கூறியதாவது: பாதுகாப்பு துறை கண்காட்சி, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக திகழும். இது, இந்திய தொழிலக கூட்டமைப்பிற்கு, ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும். கண்காட்சியில், 850 நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதன் மூலம், உற்பத்தி துறைக்கு அதிக தேவை ஏற்படுவதுடன், கோவாவின், வர்த்தக வாய்ப்பும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார். இந்நிலையில், கோவாவில் உள்ள, பேடூல் கிராமத்தில், மார்ச், 28ம் தேதி முதல், 31ம் வரை நடக்கும், பாதுகாப்பு துறை கண்காட்சிக்கு, உள்ளூர் மக்களின் கருத்தை கேட்காமல் நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. ஆனால், ‘பாதுகாப்பு கண்காட்சி, தற்காலிமாக நடத்தப்பட உள்ளது. இதற்காக, நிரந்தர கட்டடங்கள் கட்டப்படாது’ என, அம்மாநில முதல்வர் லக் ஷ்மிகாந்த் பர்சேகர் கருத்து தெரிவித்து உள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|