அமேசான் ஆரம்­பிக்­கி­றது அனைத்து மகளிர் நிலையங்கள் அமேசான் ஆரம்­பிக்­கி­றது அனைத்து மகளிர் நிலையங்கள் ... மீண்டும் தங்க சேமிப்பு பத்திரம் மீண்டும் தங்க சேமிப்பு பத்திரம் ...
மாற்றம் ஒன்றே மாறா­தது கண்டு கொண்ட கார்ப்­பரேட் நிறு­வ­னங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 மார்
2016
03:54

புது­டில்லி:‘மாற்றம் ஒன்றே மாறா­தது’– இதை நன்கு புரிந்து கொண்ட பல கார்ப்­பரேட் நிறு­வ­னங்கள், ‘டிஜிட்டல்’ தொழில்­நுட்ப உலகின் வேக­மான மாற்­றங்­க­ளுக்குத் தயா­ராகி வரு­கின்­றன.
இதற்­காக, பல கால­மாக பின்­பற்றி வரும், வர்த்­தக நடை­முறைகள், ஊழியர் கொள்­கைகள் உள்­ளிட்­ட­வற்றில், புதிய அணு­குமு­றையை பின்­பற்றத் துவங்­கி­உள்ளன. பிரிட்­டனைச் சேர்ந்த டிலேட்டி நிறு­வனம், உல­க­ளவில், மனித வளம், தலைமை பண்பு உள்­ளிட்­டவை தொடர்­பாக, ஆண்­டு­தோறும் ஆய்வு மேற்­கொண்டு வரு­கி­றது.
இந்­தாண்டு, 130 நாடு­களில், ஏழா­யி­ரத்­திற்கும் அதி­க­மான நிறு­வ­னங்­களைச் சேர்ந்த, மனிதவள மேலா­ளர்கள், தொழி­ல­தி­பர்கள் ஆகி­யோ­ரிடம் ஆய்வு நடத்தி, அறிக்கை வெளி­யிட்­டுள்­ளது.
மறு சீரமைப்புஅதன் விவரம்:கடந்த, மூன்று ஆண்­டு­க­ளாக நடத்­தப்­பட்ட ஆய்வில், கார்ப்­பரேட் நிறு­வ­னங்கள், ஊழி­யர்­களை பணிக்கு அமர்த்­து­வது, அவர்­களை தக்க வைத்துக் கொள்­வது, தலைமைப் பண்­பு­களை ஊக்­கு­விப்­பது போன்ற நட­வ­டிக்­கை­களுக்கே அதிகம் முக்­கி­யத்­துவம் கொடுத்­தது தெரி­ய­வந்­தது.
ஆனால், இந்­தாண்டு, ஆய்வில் பங்­கேற்­றோரில், 98 சத­வீதம் பேர், ‘சர்­வ­தேச வர்த்­த­கத்­திற்கு ஏற்ப, நிறு­வ­னங்­களின் செயல்­பா­டு­களை மறு­சீ­ர­மைக்க வேண்­டி­யது அவ­சியம்’ என, தெரி­வித்­துள்­ளனர். அதில், 39 சத­வீத நிறு­வ­னங்கள், மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களை துவக்கி விட்­டன; 6 சத­வீத நிறு­வ­னங்கள், சீர்­தி­ருத்­தத்­திற்கு திட்­ட­மிட்­டுள்­ளன. இந்­நி­று­வ­னங்கள், அரதப் பழ­சான, ஒரு நபர் சார்ந்த தலைமை, பாரம்­ப­ரிய வணிக நடை­முறை ஆகி­ய­வற்­றுக்கு விடை கொடுத்து விட்டு, ஊழியர் குழுக்­க­ளுக்கு, முன்­னு­ரிமை அளித்து, செயல்­பட்டு வரு­கின்­றன.
இக்­கு­ழுக்­களில் உள்­ளோ­ருக்கு, தலைமை பண்­புக்­கான பயிற்சி வழங்­கப்­ப­டு­கி­றது. சுருக்­க­மாகச் சொன்னால், தலைமை பொறுப்பில் உள்ள ஒரு­வரின், விருப்பு வெறுப்பில், செயல்­படும் போக்கைத் தவிர்த்து, ஊழியர் குழுக்­களின் ஆலோ­ச­னை­யுடன் நிர்­வாகம் நடை­பெ­று­கி­றது.
டிஜிட்டல் மயம்lஊழி­யர்கள் ஒருங்­கி­ணைந்து, பணி­களை சுல­ப­மாகச் செய்­வ­தற்­கான சூழலை, நிறு­வ­னங்கள் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கின்­றன. இது, நிறு­வ­னங்­க­ளுக்கு கூடுதல் வாடிக்­கை­யா­ளர்­களை பெற்றுத் தந்து, வர்த்­தகம் பெருக துணை புரி­கி­றது. இந்­நி­று­வ­னங்கள், ஊழி­யர்கள், தங்­க­ளுக்கு விருப்­ப­மான பணி நேரத்தை தேர்வு செய்­யவும், பகுதி நேர­மா­கவோ அல்­லது ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் பணி­யாற்­றவும் வாய்ப்­ப­ளிக்­கின்­றன.
அதனால், இந்­நி­று­வ­னங்­களில், முத­லாளி – தொழி­லாளி என்ற பேதம் மறைந்து வரு­கி­றது. இதற்கு, அனைத்து பணி­களும் ‘டிஜிட்டல்’ மய­மாகி வரும் வசதி, மிகப்பெரிய அளவில் துணை புரி­கி­றது. 42 சத­வீத நிறு­வ­னங்கள், ஊழி­யர்­க­ளு­ட­னான அவற்றின் நிர்­வாகச் செயல்­பா­டு­களை, மொபைல் போன் மூலம் இணைத்­துள்­ளன.
பிரமிட் முறை மாறும்இதனால், ஊழி­யர்கள் எந்த நேரத்­திலும், எங்­கி­ருந்தும், நிர்­வாகப் பணி­களை மேற்­கொள்ள துணை புரி­கி­றது. ஊழி­யர்­களின் திறனை அடை­யாளம் கண்டு, அவர்­க­ளுக்கு பயிற்சி அளிப்­ப­தற்கென்றே, மனிதவள மேம்­பாட்டு துறையில், புதிய பத­விகள் உரு­வாக்­கப்­பட உள்­ளன. இது போன்ற சீர்­தி­ருத்­தங்­களால், ‘பிரமிட்’ போன்ற நிர்­வாக நடை­முறை அடி­யோடு மாறும். ஏனெனில், இத்­த­கைய முறையில் போது­மான அள­விற்கு, தலைமைப் பண்­பா­ளர்­களை உரு­வாக்க முடி­ய­வில்லை என்­பது, கடந்த கால வர­லாறு. அதை கருத்தில் கொண்டு, கார்ப்­பரேட் நிறு­வ­னங்கள், புதிய கொள்­கைக்கு மாறத் துவங்­கி­­உள்ளது வர­வேற்­கத்­தக்­கது. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)