தடை கோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட் தள்­ளு­படிதடை கோரிய வழக்கு சுப்ரீம் கோர்ட் தள்­ளு­படி ... மருத்­துவ சாதன துறை வரி அதி­க­ரிப்பால் தவிப்பு மருத்­துவ சாதன துறை வரி அதி­க­ரிப்பால் தவிப்பு ...
ஆச்­ச­ரி­யத்தில் முத­லீட்­டா­ளர்கள்... டிவி­டெண்டு’ வழங்­கு­வதில் ஏன் இவ்­வ­ளவு வேகம்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2016
02:43

புது­டில்லி:அடுத்த மாதம் முதல், பங்கு முத­லீட்­டா­ளர்­க­ளுக்­கான டிவிடெண்ட் தொகைக்கு, 10 சத­வீத வரி விதிப்பு அம­லுக்கு வரு­கி­றது. இதை தவிர்க்க, ஏரா­ள­மான நிறு­வ­னங்கள், அவ­சர அவ­ச­ர­மாக, டிவிடெண்ட் அறி­விப்பை வெளி­யிட்டு வரு­கின்­றன.
மத்­திய அரசின், 2016 – 17ம் நிதி­யாண்டு பட்­ஜெட்டில், ‘10 லட்சம் ரூபாய்க்கு மேற்­பட்ட டிவிடெண்ட் தொகைக்கு, 10 சத­வீத வரி விதிக்­கப்­படும், என, தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஏற்­க­னவே, நிறு­வ­னங்கள், 20.47 சத­வீதம் டிவிடெண்ட் வினி­யோக வரி செலுத்தி வரு­கின்­றன. இத்­துடன், மேலும், 10 சத­வீத வரி விதிப்பு சேர்ந்­துள்­ளதால், மிக அதிக அளவில் பங்­கு­களை வைத்­துள்ள நிறு­வ­னர்கள் உள்­ளிட்ட பங்கு முத­லீட்­டா­ளர்கள், அதிக வரி செலுத்த நேரிடும். இதை தவிர்க்க, ஏற்­க­னவே, நுாற்­றுக்கும் அதி­க­மான நிறு­வ­னங்கள், டிவிடெண்ட் அறி­விப்பை வெளி­யிட்­டுள்­ளன. இம்­மாத இறு­திக்குள், மேலும் பல நிறு­வ­னங்கள் டிவிடெண்ட் அறி­விக்கும் என, எதிர்­பார்க்­கப்ப­டு­கி­றது.
இந்­நி­லையில், இரு தினங்­க­ளுக்கு முன், ஒரே நாளில், 50க்கும் அதி­க­மான நிறு­வ­னங்­களின் இயக்­குனர் குழு கூட்டம் நடை­பெற்­றது. இதில், பெரும்­பான்­மை­யான நிறு­வ­னங்­களின், டிவிடெண்ட் பரிந்­து­ரைக்கு, ஒப்­புதல் வழங்­கப்­பட்­டது.
இதன்­படி, ரிலையன்ஸ் இண்­டஸ்ட்ரீஸ் நிறு­வனம், பங்கு ஒன்­றுக்கு, இடைக்­கால டிவி­டெண்­டாக, 10.50 ரூபாய் வழங்­கு­வ­தாக அறி­வித்­துள்­ளது. இந்த வகையில், இந்­நி­று­வனம், 3,140 கோடி ரூபாய் டிவிடெண்ட் வழங்க உள்­ளது. இதில், ரிலையன்ஸ் நிறு­வ­னர்­க­ளான, அம்­பானி குடும்­பத்­தி­ன­ருக்கு மட்டும், 1,515 கோடி ரூபாய் கிடைக்கும்.
அதே­போல, இரு சக்­கர வாக­னங்­களை தயா­ரிக்கும், ‘ஹீரோ மோட்­டோகார்ப்’ நிறு­வ­னத்தின் இயக்­குனர் குழு, பங்கு ஒன்­றுக்கு, 40 ரூபாய் இடைக்­கால டிவிடெண்ட் வழங்க ஒப்­புதல் அளித்­துள்­ளது. நுகர்­பொருள் தயா­ரிப்பு நிறு­வ­ன­மான, மாரிக்கோ, பங்கு ஒன்­றுக்கு, ஒரு ரூபாய் டிவிடெண்ட் வழங்­கு­வ­தாக தெரி­வித்­துள்­ளது.
இரு சக்­கர வாக­னங்­களை தயா­ரிக்கும், பஜாஜ் ஆட்டோ நிறு­வனம், இடைக்­கால டிவிடெண்ட் ஆக, பங்கு ஒன்­றுக்கு, 50 ரூபாய் வழங்­கு­வ­தாக கூறி, முத­லீட்­டா­ளர்­களை மகிழ்ச்­சியில் ஆழ்த்­தி­உள்­ளது. பொது துறையைச் சேர்ந்த கோல் இந்­தியா நிறு­வனம், அதன் பங்கு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு, பங்கு ஒன்­றுக்கு, 27.40 ரூபாய், இடைக்­கால டிவிடெண்ட் வழங்­கு­வ­தாக அறி­வித்­துள்­ளது. இதன்­படி, இந்­நி­று­வனம், 20,830 கோடி ரூபாய், இடைக்­கால டிவிடெண்ட் வழங்க உள்­ளது. இதில், இந்­நி­று­வ­னத்தில், 79.64 சத­வீத பங்­கு­களை வைத்­துள்ள, மத்­திய அர­சுக்கு, 17,308 ரூபாய் கிடைக்கும்.
அன்­னி­யர்­க­ளுக்கு அல்ல* நிறு­வ­னங்கள், அவற்றின் லாபத்தில் ஒரு பங்கை, பங்கு முத­லீட்­டா­ளர்க­ளுக்கு பகிர்ந்­த­ளிப்­பது, ‘டிவிடெண்ட்’ எனப்­ப­டு­கி­றது* வரும் வாரங்­களில், 100க்கும் அதி­க­மான நிறு­வ­னங்­களின் டிவிடெண்ட் அறி­விப்பு வெளி­யாகும் என தெரி­கி­றது* புதி­தாக அறி­மு­க­மாகும் டிவிடெண்ட் வரி, இந்­திய பங்கு முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு மட்­டுமே பொருந்தும்; அன்­னிய நிறு­வ­னங்­களின் நிறு­வ­னர்கள், வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்கள் உள்­ளிட்­டோ­ருக்கு, பொருந்­தாது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)