சிறந்த பணிச்­சூழல்: 10 இந்­திய நிறு­வ­னங்கள் தேர்வுசிறந்த பணிச்­சூழல்: 10 இந்­திய நிறு­வ­னங்கள் தேர்வு ... உங்களுக்கான நிதி வாழ்க்கை! உங்களுக்கான நிதி வாழ்க்கை! ...
கட்­ட­மைப்பு துறை; சூடு பிடித்த திட்­டங்­களால் சிமென்ட் விலை கிடு... கிடு...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2016
03:08

புது­டில்லி : மத்­திய அரசின் அதி­ரடி நட­வ­டிக்­கை­களால், அடிப்­படை கட்­ட­மைப்பு துறையில் முடங்கிக் கிடந்த ஏரா­ள­மான திட்­டங்கள் புத்­துயிர் பெற்­றுள்­ளன.
இதன் விளை­வாக, சிமென்­டிற்­கான தேவை அதி­க­ரிக்கத் துவங்­கி­யுள்­ளது. இதை பயன்­ப­டுத்தி, சிமென்ட் நிறு­வ­னங்கள், 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை சிமென்ட் விலையை, 40 – 50 ரூபாய் வரை உயர்த்­தி­யுள்­ளன. வரும் மாதம், மேலும், 15 ரூபாய் உயர வாய்ப்­புள்­ள­தாக, இத் துறை­யினர் தெரி­விக்­கின்­றனர்.
மத்­திய நிதி­ய­மைச்சர் அருண்­ஜெட்லி, 2016 – 17ம் நிதி­யாண்­டிற்­கான மத்­திய பட்ஜெட் உரையில், ‘அடிப்­படை கட்­ட­மைப்பு திட்­டங்­க­ளுக்கு, 2.21 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்­கப்­படும்’ என, அறி­வித்­தி­ருந்தார். இதில், ரயில்­வேக்கு, 1.20 லட்சம் கோடி ரூபாய்; சாலைகள் அமைக்க, 1 லட்சம் கோடி ரூபாய் பிரித்­த­ளிக்­கப்­பட உள்­ளது. இதனால், மத்­திய அரசு, வரும் ஏப்ரல் முதல், சாலை திட்­டங்­க­ளுக்கு ஒப்­பந்தப் புள்­ளிகள் கோரும் என்­பதை கணக்­கிட்டு, சிமென்ட் நிறு­வ­னங்கள், மூட்­டைக்கு, கூடு­த­லாக 15 ரூபாய் உயர்த்த திட்­ட­மிட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது. ஏற்­க­னவே, கடந்த பிப்­ர­வ­ரியில், 6.57 லட்சம் கோடி ரூபாய் மதிப்­புள்ள, அடிப்­படை கட்­ட­மைப்பு திட்­டங்­க­ளுக்கு, ஒப்­பந்த புள்­ளிகள் கோரப்­பட்­டுள்­ளன. இதில், சாலை திட்­டங்­க­ளுக்கு அதிக முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­பட்­டுள்­ளது.
இதன் கார­ண­மாக, தற்­போது சிமென்ட் விலை உயர்ந்­துள்ள நிலையில், அடுத்த மாதம் முதல், 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்­புள்ள சாலை திட்­டங்­க­ளுக்கு படிப்­ப­டி­யாக ஒப்­பந்தப் புள்­ளிகள் கோரப்­பட்டால், சிமென்ட் தேவை எகிறும்; அதன் விலை உயரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.இந்­திய சிமென்ட் உற்­பத்­தி­யா­ளர்கள் கூட்­ட­மைப்பின் தலைவர் சஞ்சய் லடி­வாலா பேசு­கையில், ‘‘கோடையில், சிமென்ட் தேவையும், விற்­ப­னையும் அதி­க­ரிப்­பது வழக்கம் தான். அதனால், விலை உயர்வு இருக்கும். இந்­தி­யாவின் வடக்கு பகு­தி­களில், சிமென்ட் தேவை அதி­க­ரித்­துள்ள போதிலும், தென் மாநி­லங்­களில், அதன் தேவை நிலை­யாக உள்­ளது,’’ என்றார். சிமென்ட் நிறு­வ­னங்கள் கூட்டு சேர்ந்து விலையை உயர்த்­து­வ­தாக கூறப்­படும் குற்­றச்­சாட்டை அவர் மறுத்தார்.
அரசு அதி­காரி ஒருவர் கூறு­கையில்,‘ தென் மாநி­லங்­களில் சிமென்ட்­டிற்­கான தேவை அதி­க­ரிக்­க­வில்லை என்ற போதிலும், அடுத்த மூன்று மாதங்­களில், அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ளது. இந்த தாக்­கத்­துடன், தற்­போது உயர்த்­தப்­பட்­டுள்ள டீசல் விலையும், வரும் மாதங்­களில் சிமென்ட் விலை உயர வழி வகுக்கும்’ என, கூறினார்.சிமென்ட் விலை உயர்வால், கட்­டு­மானச் செலவு அதி­க­ரிக்­குமே என்ற கவ­லையில் இருக்­கின்­றனர் வீடு கட்­டுவோர்.

மாநிலம் விலை வடக்கு 276தெற்கு 344மேற்கு 285கிழக்கு 290(50 கிலோ சிமென்ட் / விலை ரூபாயில்)

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)