பதிவு செய்த நாள்
24 மார்2016
00:41
இந்துார் : மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம், பால் விற்பனையிலும் இறங்கி உள்ளது. முதற்கட்டமாக இந்துாரில், தன் பால் வியாபாரத்தை ஆரம்பிக்கிறது.மோட்டார் வாகன தயாரிப்பு துறையில் புகழ்பெற்ற நிறுவனமான மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம், விவசாயப் பிரிவிலும் கால் பதித்து வருகிறது. பழங்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றை ஏற்கனவே விற்பனை செய்து வருகிறது. மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனத்தின் விவசாயப் பிரிவின் தலைமைச் செயல் அதிகாரியான அசோக் சர்மா இது குறித்து கூறியதாவது: நான்கு வகை பால்களை சாபோரோ எனும் பிராண்டில் நாங்கள் தருகிறோம். பிற பெரிய நகரங்களில் விற்பனையை ஆரம்பிப்பதற்கு முன் இந்துாரில் அறிமுகம் செய்கிறோம். எங்களது அனைத்து வகையான பால்களிலும் விட்டமின் ஏ மற்றும் டி இருக்கும். ஒரு லிட்டர் பாலின் விலை 35.50 ரூபாய் என நிர்ணயித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|