பதிவு செய்த நாள்
25 மார்2016
10:53
புதுடில்லி:இந்தியாவில், 'ஸ்மார்ட் போன்'விற்பனை, மிக வேகமாக அதிகரித்து வருகிறது. இதன் விற்பனை, இந்த ஆண்டு, 10 கோடியாக இருக்கும்; 2017ல், 16 கோடியை எட்டும் என, கணிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில், ஸ்மார்ட் போன் விற்பனை குறித்து, 'அசோசெம்' எனப்படும், இந்திய தொழில் மற்றும் வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:அனைவரும் வாங்கக் கூடிய விலையில் கிடைப்பதால், ஸ்மார்ட் போன்களின் விற்பனை, 2016ல், 10 கோடியையும், 2017ல், 16 கோடியையும் எட்டும்; இது 60 சதவீத வளர்ச்சியாகும்இதில், 75 சதவீத விற்பனை, பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் நடக்கும்கேமரா வசதியுடன் கிடைப்பதால், 95 சதவீதம் பேர், 'டிஜிட்டல்' கேமராக்களை விட, ஸ்மார்ட் போன்களையே விரும்புகின்றனர்.கையடக்க கேமராக்களின் விற்பனை, 35 சதவீதம் குறைந்துள்ளது. அடுத்த சில ஆண்டுகளில், இது காணாமல் போய்விடும்வீட்டு தேவைக்கான கம்ப்யூட்டர், எம்.பி.,3 பிளேயர் போன்றவற்றின் விற்பனையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|