பதிவு செய்த நாள்
29 மார்2016
07:04
புதுடில்லி : சினிமா திரையிடலில் முன்னணியில் உள்ள பி.வி.ஆர்., நிறுவனத்தின், இணையதள டிக்கெட் விற்பனை, தற்போது, 32 சதவீதமாக உள்ளது. இதை, 37 சதவீதமாக உயர்த்த, அந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. இணையதள டிக்கெட் விற்பனையை அதிகரிக்கும் முயற்சிகளில் ஒன்றாக, சமீபத்தில், ‘பேடிஎம்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிறுவனம், ஆண்டுக்கு, 60 முதல், 80 புதிய திரையரங்கங்களை துவக்க திட்டமிட்டு உள்ளது. இதற்காக, 200 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், இந்நிறுவனத்தின் வருவாய், 671 கோடி ரூபாயில் இருந்து, 1,386 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல், பி.வி.ஆர்., திரையரங்கங்களின் எண்ணிக்கையும், 402ல் இருந்து, 516 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, பி.வி.ஆர்., நிறுவனம், டில்லியில் உள்ள டி.டி.சினிமாஸ் என்ற திரையரங்கத்தை வாங்க திட்டமிட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|