நான்ஸ் குழு­மத்­துடன் கூட்­டணி; ஷாப்பர்ஸ் ஸ்டாப் மறு­ப­ரி­சீ­லனை நான்ஸ் குழு­மத்­துடன் கூட்­டணி; ஷாப்பர்ஸ் ஸ்டாப் மறு­ப­ரி­சீ­லனை ... மார்ச்சில் முதன் முறை­யாக இந்­தி­யாவின் வர்த்­தக சூழல் குறி­யீட்டு எண் சரிவு மார்ச்சில் முதன் முறை­யாக இந்­தி­யாவின் வர்த்­தக சூழல் குறி­யீட்டு எண் ... ...
தொழில் துவங்­கு­வது மேலும் சுல­ப­மாகும்: அருண் ஜெட்லி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2016
23:29

சிட்னி : ‘‘இந்­தி­யாவில் தொழில் துவங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் சுல­ப­மாக்­கப்­பட்­டுள்­ளன. எனினும், அதை மேலும் சுல­ப­மாக்­கினால், அன்­னிய மற்றும் உள்­நாட்டு முத­லீ­டுகள் குவியும். அதற்­கான நட­வ­டிக்­கை­களை மத்­திய அரசு எடுத்து வரு­கி­றது,’’ என, மத்­திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரி­வித்­துள்ளார்.
ஆஸ்­தி­ரே­லி­யாவில், சிட்னி நகர வணிக கல்­லுாரி ஒன்றில், அவர் ஆற்றிய உரை: இந்­தி­யாவில், காப்­பீடு, ரயில்வே, பாது­காப்பு உள்­ளிட்ட பல்­வேறு துறைகள், அன்­னிய நேரடி முத­லீ­டு­களை ஈர்க்க முடி­யாத நிலையில் இருந்­தன. பிர­தமர் மோடி தலை­மை­யி­லான அரசு அமைந்த பின், இந்­திய பொரு­ளா­தாரம் மேலும் தாரா­ள­ம­ய­மாக்­கப்­பட்டது. இதன் கார­ண­மாக, காப்­பீடு, ரயில்வே உள்­ளிட்ட துறை­களில் அன்­னிய நேரடி முத­லீடு குவியத் துவங்­கி­யுள்­ளது.
அன்­னிய நேரடி முத­லீ­டு­க­ளுக்கு தடை­யாக உள்ள, தேவை­யற்ற நிபந்­த­னைகள் நீக்­கப்­பட்­டன; வர்த்­தக நடை­மு­றைகள் எளி­மை­யாக்­கப்­பட்­டன. அன்னிய நேரடி முத­லீட்­டிற்கு ஏற்ற நாடாக, இந்­தியா உரு­வெ­டுத்­துள்­ளது. இந்த நிலை­யிலும், தொழில் துவங்­கு­வ­தற்­கான நடை­மு­றை­களை மேலும் சுல­ப­மாக்கும் நட­வ­டிக்­கை­களை மத்திய அரசு மேற்­கொண்டு வரு­கி­றது. நிலை­யான கொள்கை, விரை­வாக தொழில் துவங்கும் வசதி, எளி­தான அனு­மதி நடை­மு­றைகள் போன்­ற­வற்றின் மூலம், ‘இந்­தி­யாவில் தொழில் துவங்­கு­வது சுலபம்’ என்ற கண்­ணோட்­டத்தை, உலக அரங்கில் ஏற்­ப­டுத்தும் முயற்­சியில், மத்­திய அரசு ஈடு­பட்­டு உள்­ளது.
வரி பிரச்­னை­களில் விரைவில் தீர்வு காணவும், சர்­வ­தேச நில­வ­ரப்­படி, நிறுவன வரியை, படிப்­ப­டி­யாக, 25 சத­வீ­த­மாக குறைக்­கவும் முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, விரைவில் நிறை­வேற்­றப்­படும். சர்­வ­தேச வர்த்­த­கத்தின் தாக்­கத்தால், பங்கு மற்றும் அன்­னிய செலா­வணி சந்­தை­களில் ஏற்­றத்­தாழ்வு நில­வு­கிறது. அதே­ச­மயம் உல­க­ளா­விய மந்­த­நிலை­யிலும், இந்­திய பொரு­ளா­தாரம், 7.5 சத­வீதம் வளர்ச்சி கண்­டி­ருப்­பது குறிப்பிடத்­தக்­கது. இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)