பதிவு செய்த நாள்
01 ஏப்2016
07:36
புதுடில்லி : மிஷெலின் நிறுவனம், பிரீமியம் வகை சைக்கிள்களுக்கான டயர் தயாரிப்பில் களம் இறங்கி உள்ளது. மிஷெலின் நிறுவனம், கார், பஸ் உள்ளிட்ட மோட்டார் வாகன சக்கரங்களுக்கான டயர் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், தற்போது பிரீமியம் வகை சைக்கிள் டயர் தயாரிப்பிலும் களம் இறங்கி உள்ளது. இதுகுறித்து, மிஷெலின் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:சமீப காலமாக, பிரீமியம் வகை சைக்கிள் துறை, ஆண்டுக்கு, 25 – 30 சதவீதம் என்றளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. இதையடுத்து, இப்பிரிவுக்கான சைக்கிள் டயர் தயாரிப்பில், மிஷெலின் களம் இறங்கி உள்ளது. தினசரி பயன்படுத்துவோர், சாகசப் பிரியர்கள் என அனைத்து தரப்பினருக்கும் ஏற்றதாக இது இருக்கும். ஒரு டியூப் மற்றும் டயரின் விலை, 690 ரூபாய் முதல், 2,699 ரூபாய் வரை இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|