பதிவு செய்த நாள்
07 ஏப்2016
05:36
பெங்களூரு : பியூச்சர் குரூப் நிறுவனம், அண்மையில் பேப்பர்னிஷ் டாட் காம் என்ற இணைய வர்த்தக நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளது. பேப்பர்னிஷ் நிறுவனம், வீட்டு தேவைகளுக்கான மரச் சாமான்கள், மற்றும் சமயலைறைக்கான அலங்காரம் மற்றும் சாதனங்கள் ஆகியவற்றை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்து வரும் நிறுவனம் ஆகும்.இதுகுறித்து, பியூச்சர் தலைமை செயல் அலுவலர் கிஷோர் பியானி கூறியதாவது: பேப்பர்னிஷ் நிறுவனம், லாபம் ஈட்டாமல் செயல்பட்டு வருகின்ற ஒரு நிறுவனம் தான். இருந்தாலும், அது முன்னணியில் அனைவரும் அறிந்த ஒரு நிறுவனமாக இருக்கிறது. அதனால் அந்த நிறுவனத்தை கையகப்படுத்தி உள்ளோம். இதையடுத்து, பேப்பர்னிஷ் இணையதளத்தின் மூலம், பியூச்சர் குழுமத்தின் பொருட்கள் விற்பனை செய்யப்படும். பேப்பர்னிஷ் நிர்வாகமும் மற்றும், அதில் பணிபுரியும் 100 ஊழியர்களும், பியூச்சர் குழுமத்தில் இணைக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|