எல்.ஐ.சி.,பங்­கு­களில் ரூ.11,000 கோடி லாபம்எல்.ஐ.சி.,பங்­கு­களில் ரூ.11,000 கோடி லாபம் ... டாடா ஸ்டீல் விதி­மீறல்: பிரிட்டன் அரசு விசா­ரணை டாடா ஸ்டீல் விதி­மீறல்: பிரிட்டன் அரசு விசா­ரணை ...
ஜொலிக்­கி­றது இந்­தியா: அன்­னி­யர்கள் விரும்பும் ‘மசாலா பாண்டு’ குவிந்­தது ரூ.11,000 கோடி முத­லீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஏப்
2016
06:12

வாஷிங்டன் : ‘வளரும் நாடு­க­ளுடன் ஒப்­பி­டும்­போது, முத­லீட்­டா­ளர்­களின் நம்­பிக்கை நட்­சத்­தி­ர­மாக, இந்­தியா ஜொலிக்­கி­றது’ என, உலக வங்­கியின் அங்­க­மான, ஐ.எப்.சி., எனப்­படும், சர்­வ­தேச நிதி கழகம் பாராட்டு தெரி­வித்­துள்­ளது.
அமெ­ரிக்­காவைச் சேர்ந்த, ஐ.எப்.சி., வளரும் நாடு­களில், தனியார் துறையை ஊக்­கு­விக்கும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டு வரு­கி­றது. இத்­துடன், பல்­வேறு நாடு­களில் முத­லீ­டு­களை மேற்­கொள்­வது; தனியார் துறை சொத்­துக்­களை நிர்­வ­கிப்­பது உள்­ளிட்ட பணி­க­ளிலும் அது ஈடு­பட்­டுள்­ளது. இந்த வகையில், ஐ.எப்.சி., இந்­தி­யாவில், ரூபாயில் முத­லீடு செய்யக் கூடிய, கடன் பத்­தி­ரங்­களை வெளி­யிட்டு வரு­கி­றது. வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்கள் வட்­டத்தில், ‘மசாலா பாண்டு’ என்­ற­ழைக்­கப்­படும், இக்­கடன் பத்­தி­ரங்­களில், அதிக அளவில் அன்­னிய முத­லீடு குவிந்து வரு­கி­றது.
கடந்த, இரண்­டரை ஆண்­டு­களில், ஐ.எப்.சி., 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்­பி­லான, மசாலா பாண்­டு­களை வெளி­யிட்­டுள்­ளது. இவற்றில், வெளி­நாட்டு முத­லீட்­டா­ளர்கள் ஆர்­வ­முடன் முத­லீடு செய்­துள்­ளனர். இந்த கடன் பத்­தி­ரங்கள் மூலம் திரட்­டப்­பட்ட தொகை, இந்­தி­யாவில், தனியார் துறையில் நடை­பெற்று வரும், 11 திட்­டங்­களில் முத­லீடு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்­தி­யாவின் வளர்ச்சி கார­ண­மாக, அயல்­நாட்­டினர் ஆர்­வ­முடன் கடன் பத்­தி­ரங்­களில் முத­லீடு செய்து வரு­வதால், உற்­சாகம் அடைந்­துள்ள, ஐ.எப்.சி., மேலும், 9,000 கோடி ரூபாய் மதிப்­பி­லான மசாலா பாண்­டு­களை வெளி­யிட உள்­ளது.
இந்­திய பங்குச் சந்­தை­களில், முத­லீடு செய்­யக்­கூ­டிய, கடன் பத்­தி­ரங்­க­ளையும், ஐ.எப்.சி., வெளி­யிட்டு வரு­கி­றது. நிதி வட்­டா­ரத்தில், ‘மகா­ராஜா பாண்டு’ என, அழைக்­கப்­படும் இந்த கடன் பத்­தி­ரங்கள் மூலம், 16 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட, ஐ.எப்.சி., திட்­ட­மிட்­டுள்­ளது.இந்­தி­யாவில், கடந்த, 1958ம் ஆண்டு முதல், ஐ.எப்.சி., முத­லீடு செய்து வரு­கி­றது. இந்­தி­யாவில், ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதி­க­மான முத­லீ­டு­களை, ஐ.எப்.சி., செய்­துள்­ளது; இது, பிற நாடு­களில் மேற்­கொள்­ளப்­பட்­டதை விட, அதிகம் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.
தனித்தன்மைஅனைத்து வளரும் நாடு­களும் கடு­மை­யான சவால்­களை சந்­தித்து வரும் நிலையில், இந்­தியா, தனித்­தன்­மை­யுடன் வளர்ச்சி கண்டு வரு­கி­றது. சீனா, கடும் பொரு­ளா­தார மந்­த­நி­லையில் சிக்­கி­யுள்­ளது. அது­போல, பிரேசில், தென் ஆப்­ரிக்கா, ரஷ்யா ஆகிய நாடு­களின் வளர்ச்­சியும், பல்­வேறு பிரச்­னை­களால் சரி­வ­டைந்­துள்­ளது. பிரேசில், ரஷ்யா, இந்­தியா, சீனா, தென் ஆப்­ரிக்கா ஆகிய நாடு­களை உள்­ள­டக்­கிய, ‘பிரிக்ஸ்’ கூட்­ட­மைப்பில், இந்­தியா மட்­டுமே, சிறப்­பான வளர்ச்­சி­யுடன் பிர­கா­ச­மாக ஜொலிக்­கி­றது. அதனால் தான், இந்­தி­யாவில் வெளி­நாட்­டினர் அதிக ஆர்­வ­முடன் முத­லீடு செய்து வரு­கின்­றனர்.– ஜிங்டங் ஹு, துணைத் தலைவர், ஐ.எப்.சி.,

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)