பதிவு செய்த நாள்
27 ஏப்2016
23:34
புதுடில்லி : ‘ஓலா’ நிறுவனம், குறைந்த கட்டண கால் டாக்சி சேவையை, 75 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்துள்ளது. ‘ஓலா’ நிறுவனம், ‘மைக்ரோ’ என்ற பெயரில், சலுகை கட்டண டாக்சி சேவையை, இரண்டு மாதங்களுக்கு முன், ஏழு நகரங்களில் துவங்கியது. தற்போது, இந்த சேவை ஜான்சி, மதுரா, சென்னை, தஞ்சை, ஹூப்ளி உள்ளிட்ட, 75 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மாதத்தின் ஆரம்பத்தில் தான் போட்டி நிறுவனமான ஊபர் நிறுவனம், ‘ஊபர்கோ’ எனும் திட்டத்தை, 10 சிறு நகரங்களில் அறிமுகம் செய்தது. இதன்படி கட்டணத்தில், 22 சதவீதம் வரை தள்ளுபடி செய்தது. ஓலா விரிவாக்கம் குறித்து, ஊபர் நிறுவனம் கூறுகையில், ‘எங்கள் சேவை, தரம் மூலம் எங்கள் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே உள்ள நகரங்களில் எங்கள் சேவையை விரிவுப்படுத்த உள்ளோம்’ என்று மட்டும் தெரிவித்திருக்கிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|