பதிவு செய்த நாள்
13 மே2016
07:14
புதுடில்லி:விலையுயர்ந்த டூ – வீலர்கள் தயாரிக்கும் எம்வி அகஸ்டா நிறுவனம், இந்திய சந்தையில் நுழைகிறது.இத்தாலி நாட்டைச் சேர்ந்த எம்வி அகஸ்டா நிறுவனம், விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில், கடந்த 70 ஆண்டுகளுக்கு மேல் ஈடுபட்டு வருகிறது. அகஸ்டா வாகனத்தின் விலை, 17.50 லட்சம் ரூபாயாக இருக்கும் என, தெரிகிறது. அகஸ்டா டூ – வீலர்கள் வரவால், டுகாட்டி, கவாசகி, ஹோண்டா, யமஹா ஆகிய நிறுவனங்களின் வாகனங்களுக்கு கடும் போட்டி இருக்கும்.
இதுகுறித்து, அகஸ்டா நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்தியாவில், ஓராண்டிற்கு, 1.40 கோடி டூ – வீலர்கள் விற்பனையாகின்றன. இதில், விலையுயர்ந்த டூ – வீலர்களின் பங்கு, 12 ஆயிரம் என்றளவில் உள்ளது. மேலும், இத்தகைய வாகனங்களுக்கு தேவை அதிகரித்து வருகிறது. இதை, எங்கள் நிறுவனத்தின் வாகனங்கள் பூர்த்தி செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|