பதிவு செய்த நாள்
22 மே2016
04:10

புதுடில்லி;இந்தாண்டின், முதல் காலாண்டில், ‘ஸ்மார்ட் போன்’ விற்பனையில், டில்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, கோல்கட்டா ஆகிய பெரு நகரங்களின் பங்களிப்பு, 26.4 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது, முந்தைய காலாண்டில், 29.9 சதவீதமாக இருந்தது. பெருநகரங்களில், ஸ்மார்ட் போன் விற்பனை, தேக்க நிலை கண்டுள்ளதை, இது காட்டுகிறது. அதேசமயம், இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில், ஸ்மார்ட் போன் விற்பனை அதிகரித்து வருகிறது.
‘இதற்கு, சீனாவின், ‘லெனோவா, மோட்டரோலா, ஜியோமி, லீகோ’ போன்ற மொபைல் போன் நிறுவனங்களின் ஸ்மார்ட் போன் விற்பனை குறிப்பிடத்தக்க வகையில் துணை புரிந்துள்ளது’ என, ஐ.டி.சி., நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நிறுவனங்கள், வலைதளம் வாயிலான ஸ்மார்ட் போன் விற்பனையில், நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. அந்நகரங்களில், அவற்றின் ஸ்மார்ட் போன் வினியோகத்தையும், சில்லரை விற்பனையையும் பரவலாக்கி வருகின்றன. அதனால், நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களில், சீனாவின் ஸ்மார்ட் போன்கள் விற்பனை அதிகரித்து வருகிறது.
இந்த சந்தையை பிடிக்க, சீனாவின், ‘ஒப்போ, விவோ’ போன்ற மொபைல் போன் நிறுவனங்களும், அதிக அளவில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்கும், விளம்பரங்களுக்கும் செலவிட்டு வருகின்றன. சீன நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்கள், குறைந்த விலையில் தரமாகக் கிடைப்பதால், அவற்றுக்கான சந்தை வாய்ப்பு பெருகி வருகிறது என, ஐ.டி.சி., அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|