பதிவு செய்த நாள்
22 மே2016
04:09

புதுடில்லி:பிளிப்கார்ட்டின் துணை நிறுவனமான இகார்ட் நிறுவனம், கூரியர் சேவையில் களம் இறங்க முடிவு செய்து உள்ளது.இணையதள வணிகத்தில் முன்னணியில் உள்ள, ‘பிளிப்கார்ட்’டின் துணை நிறுவனம் இகார்ட். இந்த நிறுவனம், இந்தியாவில், சரக்கு சேவை துறையில், பெரிய அளவிற்கு சந்தையை வைத்துள்ளது. தற்போது, ‘இகார்ட் கூரியர்’ என்ற பெயரில், கூரியர் சேவையையும் அறிமுகம் செய்கிறது.
முதற்கட்டமாக, 2016 ஜூன் மாதத்திற்குள், 3,800 இடங்களுக்கு, எட்டு நகரங்களில் இருந்து கூரியர் சேவையில் ஈடுபட திட்டமிட்டுள்ளது. இகார்ட் கூரியர் நிறுவனம், ‘ஜி.பி.எஸ்., மேப்பிங் பிளாட்பாரம், ஆன்லைன் புக்கிங், டிராக்கிங்’ என, ‘ஸ்மார்ட் கூரியர்’ சேவையை வழங்க இருக்கிறது. இந்தியாவில், 2016 – 2017ல், கூரியர் சேவை துறையின் சந்தை மதிப்பு, 22 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|