பதிவு செய்த நாள்
31 மே2016
07:27

புதுடில்லி : ஹிந்துஜா குளோபல் நிறுவனம், 180 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. ஹிந்துஜா குளோபல் சொல்யூஷன்ஸ் நிறுவனம், வணிக மேலாண்மை துறையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம், 180 கோடி ரூபாய் திட்ட செலவில், பிலிப்பைன்ஸ், ஜமைக்கா, இந்தியாவில், தலா, ஒரு மையத்தை அமைக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, ஹிந்துஜா குளோபல் நிறுவன தலைமை செயல் அதிகாரி பார்த்தா டி சர்கார் கூறியதாவது:எங்கள் நிறுவனம், விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளது. இதற்காக, நடப்பு நிதியாண்டில், மூலதன செலவிற்காக ஒதுக்கி உள்ள, 180 கோடி ரூபாய் செலவில், ஜமைக்கா, பிலிப்பைன்ஸ், இந்தியா ஆகிய மூன்று நாடுகளில், நிறுவனத்தின் டெலிவரி மையங்கள் துவக்கப்பட உள்ளன. தற்போது, புதிதாக, 3,000 ஊழியர்களை வேலைக்கு எடுக்க உள்ளோம். இதன் மூலம், மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை, 40 ஆயிரமாக அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|