பதிவு செய்த நாள்
13 ஜூன்2016
07:31
பங்குச்சந்தை வர்த்தகம் தொடர்பான அடிப்படை அம்சங்களை கற்றுத்தர உதவும் ஸ்மார்ட் போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.நிதி சேவை வழங்கும் நிறுவனங்களின் ஒன்றான ஹெட்ஜ் இக்வட்டீஸ், டோரோ இ ஆர்சோ (Toro e Orso -Stock Market Game) எனும் பெயரில் இந்த செயலியை அறிமுகம் செய்துள்ளது. விளையாட்டு போல உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி மூலம் பங்கு வர்த்தகத்தின் அடிப்படைகளை அறியலாம். இந்த விளையாட்டு, மூன்று நிலைகளை கொண்டுள்ளது. துவக்கத்தில், பங்கு வர்த்தகத்தில் ஈடுபட, 5,000 ரூபாய், ‘மறை’ பணம் அளிக்கப்படும். அதை கொண்டு பங்குகளை வாங்க முற்படும் போது, சுழலும் சக்கரத்தில் அதன் சாதகம் மற்றும் பாதகமான அம்சங்கள் தோன்றும். உதாரணத்திற்கு, மோசமான பருவமழை என்றால் நுகர்வோர் பங்குகள், 100 புள்ளி சரியும் என காண்பிக்கப்படும்.ஒவ்வொரு சுற்றிலும் குறிப்பிட்ட அம்சங்கள், எந்த துறை பங்குகள் மீது தாக்கம் செலுத்தும் என்றும் காண்பிக்கப்படும். இதில் ஈடுபடுவதன் மூலம் இளைஞர்கள் பங்குச்சந்தை வர்த்தகம் பற்றிய அடிப்படை அம்சங்களை அறிந்து கொள்ளலாம். ஆன்ட்ராய்டு போனில் இந்த செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|