பதிவு செய்த நாள்
19 ஜூன்2016
00:43
மும்பை:தனியார் துறையைச் சேர்ந்த, எச்.டி.எப்.சி., ஸ்டாண்டர்ட் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன், மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ், மேக்ஸ் பைனான்சியல் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் இணைகின்றன. இந்த இணைப்பு நடவடிக்கைக்கு, இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளதாக, மேக்ஸ் நிறுவனங்கள், ‘செபி’க்கு தெரிவித்துள்ளன. அதுபோல, கூட்டு நிறுவனங்களான, பிரிட்டனின், ஸ்டாண்டர்ட் லைப் இன்சூரன்ஸ், ஜப்பானின் மிட்சு சுமிடோமோ இன்சூரன்ஸ் ஆகியவற்றின் இயக்குனர் குழுக்களும், இணைப்பிற்கு, ஒப்புதல் அளித்துள்ளன. இதன் மூலம், தனியார் ஆயுள் காப்பீட்டு துறையில், ஆயுள் காப்பீட்டு சொத்துகளை நிர்வகிப்பதிலும், புதிய பிரீமியம் சார்ந்த வர்த்தகத்திலும், எச்.டி.எப்.சி., மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுக்கும். இந்நிறுவனம் நிர்வகிக்கும் காப்பீட்டு சொத்து மதிப்பு, 1.10 லட்சம் கோடி ரூபாய்; புதிய பிரீமியம் சார்ந்த வர்த்தகம், 9,400 கோடி ரூபாய் என்ற அளவை எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|